fbpx
Others

தேனிஆட்சித் தலைவரிடம்கோரிக்கை மனு அளிக்க திரண்ட செய்தியாளர்கள்…… ‌

தேனி மாவட்டத்தில் 09- 10 – 2024ல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க திரண்ட செய்தியாளர்கள்…… ‌
சில குறிப்பிட்ட செய்தியாளர்களின் பிடியில் மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்திற்கு உள்ளே அமைந்துள்ள செய்தியாளர் அறை இருந்து வருகிறது. இந்திய அரசாங்கத்தின் அனுமதி பெற்று நிறைய தினசரி நாளிதழ் மற்றும் வாரம் மாதம் இதழ்கள் வந்து கொண்டிருக்கின்றன இந்த பத்திரிக்கையில் வேலை செய்யக்கூடிய பல இளைஞர்கள் நன்கு படித்தவர்கள் தினம்தோறும் மக்களுக்கு உண்மையான சேவை நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்ற செய்தியாளர்கள் மீது அவதூறு பரப்புவது போன்ற வேலைகளை அந்த செய்தியாளர் அறையை ஆக்கிரமிப்பு செய்திருக்க கூடியவர்கள் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் 09- 10 – 2024 ல் கல் குவாரி, மண் குவாரி உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்கும் செய்தியாளர்கள் மீது தேனி மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கும் RNI பதிவு பெற்ற பத்திரிகையாளர்கள் சார்பில் கோரிக்கை மனு மற்றும் புகார் தெரிவிக்கப்பட்டன. சுமார் 55 செய்தியாளர்கள் வரை ஒன்று சேர்ந்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close