fbpx
GeneralRETamil Newsஅரசியல்இந்தியா

ராமர் கோயில் கட்டுமானத்திற்கு ரூ. 1 கோடி நன்கொடை..!சிவசேனா!

Shiv sena donates 1 crore to ram temple

மும்பை:

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி, ராமர் கோயில் கட்டுமானத்திற்கு ரூ. 1 கோடி நன்கொடை வழங்கியுள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் வேகமெடுத்துள்ளன. நாளை கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நடும் விழா நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என வலியுறுத்தி மக்களை ஒன்றிணைக்க தொடங்கியவர் பாஜக முன்னாள் தலைவர் எல்.கே.அத்வானி. 1991ல் தேசிய அளவிலான ரத யாத்திரையையும் நடத்தினார். ஆனால் தற்போது அவர் ராமர் கோவில் அடிக்கல் நடும் விழாவில் நேரில் கலந்து கொள்ள வில்லை.

வயது மூப்பின் காரணமாகவும், கொரோனா நடவடிக்கைகளாலும் அவர் டெல்லியிலிருந்து காணொளி மூலமாக இதை காண உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.மொத்தம் 200 பேர் வரை ராமர் கோவில் விழாவில் அனுமதிக்க இருந்த நிலையில் தற்போது 170 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் குறையலாம் என கூறப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், விஸ்வ ஹிந்து ப்ரிஷத் சார்பில் அலோக் குமார் உள்ளிட்டோரும் கலந்து கொள்ளும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பாபா ராம்தேவ் கலந்து கொள்வதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்நிலையில் ராமர் கோவில் கட்டுமானப் பணிக்காக பலரும் நகை, பணம் என நன்கொடை அளித்து வருகின்றனர். உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ராமர் கோயில் கட்டுமானத்திற்கு ரூ. 1 கோடி நன்கொடை வழங்கியுள்ளது,

Tags

Related Articles

Back to top button
Close
Close