fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

இணையத்தில் டிரெண்டான #சத்தியமா விடவே கூடாது..!

Rajinikant twitter trends

சென்னை:

சாத்தான்குளம் சம்பவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் அதுகுறித்த ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாக தொடங்கியுள்ளது.

சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு வாரம் கடந்த பின்னரும் அரசியல் தலைவர்களும், திரையுலக  பிரபலங்களும் காவல்துறை அதிகார மீறலை கண்டித்து கருத்து தெரிவித்து வந்துள்ளனர்.

மாஜிஸ்திரேட் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட நிலையில் மாஜிஸ்திரேட்டை விசாரணையின்போது காவலர் ஒருவர் மிரட்டும் தோனியில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக கொந்தளித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் போலீஸார் மாஜிஸ்திரேட்டை பேசியது குறித்து அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், குற்றவாளிகளுக்கு தக்க தண்டனையும் வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

சாத்தான்குளம் சம்பவத்தில் மிகவும் உறுதியாக ரஜினிகாந்த் தெரிவிக்கும் கண்டனம். அதை தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் இணையத்தில் #சத்தியமா_விடவே_கூடாது என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்ய தொடங்கியுள்ளனர்.

அதேசமயம் இத்தனை நாளாய் இந்த சம்பவம் குறித்து பரபரப்பான கருத்துகளும், கண்டனங்களும் எழுந்து வந்தன. அதுவரை அமைதியாக இருந்துவிட்டு, இப்போது ரஜினிகாந்த் தாமதமாக கண்டனம் பதிவு செய்திருப்பது குறித்த விமர்சனங்களும் எழுந்துள்ளன.

Tags

Related Articles

Back to top button
Close
Close