fbpx
GeneralRETamil News

5 கோடி நன்கொடை வழங்கிய சுந்தர் பிச்சை

கொரோனோவால் பாதிக்கப்பட்டவருக்கு உதவும் வகையில்

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர் உடன் இருக்கும் நபர்களை கண்டறியும் ப்ளூடூத் உதவி மூலம் புதிய செயலியை வடிவமைத்து தருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார் .
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது, ஏழை மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளை அரசும் வழங்கி வரும் நிலையில்.

தொழிலதிபர்கள் , விளையாட்டு பிரபலங்கள் , அரசியல்வாதிகள் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை வழங்கி வருகிறார்கள்.

Give India என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் நன்கொடை யாளர்களுக்கும்  உதவி தேவைப்படுபவர்களுக்கு இடையே ஒரு பாலமாக செயல்பட்டு வருகிறார்கள்.

அந்த தொண்டு நிறுவனத்திற்கு  Google நிறுவன CEO சுந்தர் பிச்சை 5 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளார்.

தினசரி கூலி தொழிலாளர்களின் குடும்ப நபருக்கு  கொரோனா தொற்றுகாகவும், lock down நாட்களில், நேரத்தில் தேவையான பண உதவி வழங்கும் இந்த தொண்டு நிறுவன என கூகுள் நிறுவனம்  தெரிவித்துள்ளது.

இதற்கு முன் கூகுள் நிறுவனம் கொரோனா தொற்றை அளிக்க உதவும் ஆராய்ச்சிக்கு 80 மில்லியன் டாலர் நிதி உதவி அளிக்க உள்ளதாக உறுதி செய்துள்ளது.

சிறு வணிகர்களுக்கு மூலதனமாக நிதி  தரும்  தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு  200 மில்லியன் டாலர் நிதியும் இதில் அடங்கும்.

இது மட்டுமின்றி கூகுள் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து கொரோனா பாதிக்கப்பட்டவர் அருகில் இருப்பதை கண்டறியும்  புதிய செயலியை ப்ளூடூத் உதவியுடன் இயங்கும் புதிய செயலி ஒன்றை வடிவமைத்து வருவதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலகில் கடுமையான பாதித்து வரும் நிலையில் பல்வேறு செல்வந்தர்கள் மக்களுக்கு நிதி அளித்து வருகிறார்கள் அந்த வகையில்.

அந்தவகையில் டாட்டா குடும்பம் 1500 கோடி  நிதி உதவி வழங்கியுள்ளது.

கோ விப்ரோ லிமிட்டெட் மற்றும் விப்ரோ என்டர்டைன்மென்ட் லிமிடெட், அஜிம் பிரேம்ஜி நிறுவனம் சேர்ந்து ஆயிரத்து 1125 கோடி அளித்துள்ளது.

இதைத் தவிர இன்னும் சில நிறுவனங்கள் நிதி அளித்து வருகிறது ஏழைகளுக்கு அத்தியாவசிய பொருட்களான உணர்வு , முக கவசம், மருந்து ஆகிவற்றை வழங்கி வருகிறார்கள் சில நிறுவனங்கள்.

இந்த வரிசையில் patyum 4  லட்சம் முக கவசங்களையும், 1லட்சம  சானிடைசர்களை ராணுவ வீரர்களுக்கு, மத்தியில் ரிசர்வ் போலீசுக்கும் , சுகாதார நிபுணர்களுக்கும் வழங்கியுள்ளது.

?V. NandhiniPrakash

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close