REஅரசியல்தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 82 பேர்!

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார் , அப்போது பேசிய அவர் ; தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1372 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 365 ஆக உள்ளது. இன்று மட்டும் -82 பேர் குனமடைந்துள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக உள்ளது.இன்று ஒருவரும் இறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கூடுதலாக 3 ஆய்வகங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது 31 ஆய்வகங்கள் உள்ளன.

ஆய்வக வசதியை அதிகப்படுத்தி பரிசோதனை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இன்று மட்டும் ஒரே  நாளில் 5,363 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

வளர்ந்த நாடுகளை விட இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக எடுத்து வருகிறோம்.

இவ்வாறு சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
Close
Close