fbpx
GeneralRETamil Newsஅரசியல்இந்தியா

‘லடாய்’ தரும் லடாக் பிரச்னை..! இந்தியா, சீனா இன்று முக்கிய பேச்சுவார்த்தை!

India, china talks today over ladakh issue

டெல்லி:

லடாக் விவகாரம் தொடர்பாக இந்திய – சீன ராணுவங்களுக்கு இடையே இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடக்கிறது.

இந்தியாவின் லடாக் எல்லையை ஒட்டிய பகுதிகளில் சீன ராணுவம் அத்துமீறி இருக்கிறது. அந்த பகுதிகளில் சீனா ரோந்து பணியில் ஈடுபட்டதாக இந்திய ராணுவம் குற்றம் சாட்டியது.

தொடர்ந்து பதிலடி தரும் வகையில் இந்தியாவும் ராணுவத்தை குவித்தது. அதனால் இரு நாடுகள் இடையே பதற்றம் உருவானது. பிரச்னைக்கு தீர்வு காண மத்திய வெளியுறவு அமைச்சக கூடுதல் செயலாளர் நவீன் ஸ்ரீவத்சவா, சீன வெளியுறவு அமைச்சக இயக்குனர் ஜெனரல் வு ஜியாங்கோ  வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந் நிலையில் இருநாட்டு ராணுவ உயரதிகாரிகளும் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே பகுதியின் 14வது படையின் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் பங்கேற்கிறார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close