fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

சீனாவுடனான எல்லை பிரச்னை..! மவுனம் காக்கும் மத்திய அரசு…! ராகுல் டுவீட்!

India calm about border issue with china says rahul Gandhi

டெல்லி:

இந்தியா – சீன எல்லை விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து மவுனமாக இருக்கிறது என்று ராகுல் காந்தி குற்றாம்சாட்டி உள்ளார்.

கடந்த 5-ம் தேதி லடாக் பகுதியில் சீன ராணுவ வீரர்களும், இந்திய ராணுவ வீர்களும் கைகலப்பில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. பின்னர் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும், நடத்திய பேச்சுவார்த்தையில் அமைதி திரும்பியது.

இந் நிலையில் மீண்டும் இரு நாட்டு ராணுவமும் படைகளை குவித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டு வருகிறது. இதை கவனித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா சீனா எல்லை பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று அறிவித்தார்.

ஆனால்,மத்திய அரசோ இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்சினையை அமைதிப்பேச்சின் மூலம் பேசித் தீர்ப்பதாக அறிவித்தது.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியா – சீன எல்லை விவகாரத்தில் மத்திய அரசு அமைதி காக்கிறது. சீனாவுடனான எல்லை பிரச்சினை சந்தேகத்திற்கு வழி வகுக்குகிறது.

தற்போதைய சூழ்நிலை குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும். எல்லையில் என்ன நடக்கிறது என்பதை மத்திய அரசு வெளிப்படைத்தன்மையுடன் கூற வேண்டும் என்று கூறி உள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close