fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

கல்வான் எல்லையில் ஏன் தாக்குதல்….? சீனாவை குற்றம்சாட்டிய இந்தியா!

India accuses china about galwan attack

டெல்லி:

சீனா அத்துமீறியதால் தான் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக இந்தியா பரபரப்பு குற்றம் சாட்டி உள்ளது.

எல்லையில் சீனா, இந்தியா இடையே நிகழ்ந்த தாக்குதல் காரணமாக இரு நாடுகள் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்த தாக்குதல் குறித்து அமெரிக்காவும் கருத்தை வெளியிட்டு உள்ளது.

இது குறித்து செய்திதொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது:

லடாக் நிலவரம் குறித்து, இந்தியா – சீனா பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஜூன் 6ம் தேதி உயரதிகாரிகளின் கூட்டத்தில் சுமூகமாக முடிவு எட்டப்பட்டது.

ஆனால் கால்வான் பள்ளத்தாக்கில், இந்திய எல்லைக்குள் சீனா ஒரு தலைபட்சமாக நடந்தது. இருதரப்பும் நேருக்கு நேர் மோதியதால்  உயிரிழப்புகள் ஏற்பட்டன.

எல்லைக்கட்டுப்பாட்டை நாம் பின்பற்றுவது போல சீனாவும் அப்படியே இருக்க வேண்டும். இருநாடுகளின் எல்லையில் அமைதியை பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close