RETamil News
சிறுமி ஹாசினி கொலை:தஷ்வந்த்துக்கு தூக்கு உறுதி செய்தது சென்னை உயர்நீதி மன்றம்.
சென்னை: சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற தஷ்வந்த்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
சென்னை போரூரில் 2017, பிப்., மாதம் ஹாசினி என்ற 6 வயது சிறுமியை, தஷ்வந்த், பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் கொலை செய்தான்.
இந்த வழக்கில், 2018 பிப்ரவரி,18 ல் அவனுக்கு தூக்குத்தண்டனை வழங்கி செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தூக்குத்தண்டனைக்கு எதிராக தஷ்வந்த் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராமதிலகம், விமலா ஆகியோர், தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு அளித்தனர்.