தனியார் பேருந்து அதிவேகமாக சென்ற போது கட்டுப்பாட்டை இழந்துவிபத்து..
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள பல்லகவுண்டபாளையம் பகுதியில் கோர விபத்து நான்கு பேர் உயிரிழப்பு கோவை ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் ஈரோடு முதல் திருப்பூர் வரை சென்று வரும் தனியார் பேருந்து அதிவேகமாக சென்றபோது பள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து உண்டானது இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கல்லூரி மாணவர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழப்பு மேலும் 10க்கும் மேற்பட்டோர் கைகால் முறிவு ஏற்பட்டது அதேபோல் சிறு காயங்களுடன் 20க்கும் மேற்பட்டோர் பெருந்துறை அருகே உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி விபத்துமருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு
சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு விபத்துக்குள்ளான இடத்தையும் சந்தித்து அங்கு இருந்து பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் நல்ல முறையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் மற்றும் அவர்களது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் இடம் கேட்டு அறிந்தார் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜே கே என்கின்ற ஜெயக்குமார். மாவட்ட நிருபர் சுரேஷ்குமார்