கைத்தறி தினத்தை முன்னிட்டு பிரபல நடிகை அனுஷ்கா சர்மா நாடு முழுவதும் பயணம் தொடங்கினார்
தேசிய கைத்தறி தினம் ஆகஸ்ட் 7ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி நாடு முழுவதும் பயணம் மேற்கொள்கிறார் அனுஷ்கா சர்மா. மேலும் நெசவாளர்களை ஆதரிக்கும் வகையில் சுய்தாகா மேட் இன் இந்தியா என்ற படத்தில் பாலிவுட் நடிகையான அனுஷ்காவும் வருண் தவனும் சேர்ந்து நடித்துள்ளனர். இந்தப்படம் அடுத்தமாதம் வெளியாகவுள்ளது. கைத்தறி நெசவாளர்களை ஆதரிக்கும் வகையில் இப்படத்தில் இருவரும் தையல் காரர்களாக நடித்துள்ளனர்.
“கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை இனி இல்லை ஒப்புக்கொள்” என்ற பழமொழிக்கு இணங்கியவாறு அப்படம் இறுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதலால் கைத்தொழில் நெளியுற்று வரும் நிலையில் அதனை ஆதரிக்கும் வகையில் விராட்கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா நாடு முழுவதும் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
ஆகவே தேசிய கைத்தறி தினமான இன்று அவரது பயணம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.