fbpx
GeneralRETamil NewsTrending Nowஉலகம்

மீண்டும் கொரோனா…? சீனாவில் 1,235 விமானங்களின் சேவை ரத்து!

china 1235 flight services cancelled due to corona

பெய்ஜிங்:

கொரோனா பரவல் காரணமாக, சீனாவில் 1,200க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் காரணமாக 200க்கும் மேற்பட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஆனால் சீனாவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பெய்ஜிங்கில் சந்தை ஒன்றில் இருந்து மீண்டும் கொரோனா பரவ ஆரம்பித்துள்ளது.

அங்கு 90 ஆயிரம் பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 137 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, பெய்ஜிங் விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய 1,235 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

ரயில் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Tags

Related Articles

Back to top button
Close
Close