ஊழல், வேலையின்மை குறித்து மக்களிடம் பரப்புரையாற்ற முடிவு: காங்கிரஸ்
மத்திய அரசின் ஊழல்களை மக்களிடம் அம்பலப்படுத்துவது குறித்து இன்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக ட்விட்டரில் ராகுல்காந்தி பதிவு செய்துள்ளார்.
மேலும் மத்திய அரசின் ஊழல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதில் தோல்வி போன்றவை குறித்து மக்களிடம் அம்பலப்படுத்துவது குறித்தும் பேசியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான அசோக் கெஹலோட் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசுகையில் வர இருக்கும் 4 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது என்று என்றார்.
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி உடல்நலக்குறைவால் கலந்து கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்தார்.