மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது வழக்கு பதிவு!
அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் வரைவு பதிவேடு தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதற்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் வரைவு பதிவேடு கடந்த ஜூலை 30 ஆம் தேதி வெளியானது. இதில் 40 இலட்சம் பேர்கள் விடுபட்டது.
இதை எதிர்த்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசை தொடர்ந்து சாடி வந்தார்.
அவர் ஒரு சில பேட்டிகளில் இந்த தேசியக் குடிமக்கள் வரைவு பதிவேடு உள்நாட்டுப் போரை உண்டாக்கும் என்று பேசியுள்ளதாக கூறப்படுகிறது
மம்தா பேனர்ஜியின் இந்த ஆவேச பேச்சுக்கு எதிராக முதலில் அசாம் கீதா நகர் காவல் நிலையத்தில் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் வன்முறையாக பேசியதாக குற்றம்சாட்டி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதே போன்ற வழக்குகள் அசாம் மாநிலம் கோலாகட் காவல் நிலையம் மற்றும் ஜாக்க்ரட் காவல் நிலையத்திலும் பதியப்பட்டுள்ளது. இந்நிலையில் மம்தா பானர்ஜியின் மீது நான்காவது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.