பாஜக தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருகை.

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான முயற்சிகளை எடுக்க பாரதிய ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா இன்று தமிழகம் வருகிறார்.
காலை 11.45 மணிக்கு சென்னை வரும் அமித் ஷா, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள கோல்டன் பீச் ரிசார்ட்டில் மதியம் 12.30 மணிக்கு மக்களவை தேர்தலுக்காக அமைக்கப்பட்ட தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
பிறகு பிற்பகல் 3.30 மணிக்கு நாடாளுமன்ற பொறுப்பாளர்களுடன் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
மாலை 4.45 மணிக்கு இந்து அமைப்பினருடன் ஆலோசனையில் ஈடுபடும் அமித்ஷா, அதனைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நியமிக்கப்பட்டுள்ள 16 ஆயிரம் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களிடம் உரைநிகழ்த்துகிறார்.
இரவு 8.30 மணிக்கு பாஜக புதுச்சேரி நிர்வாகிகளுடனும், 9.15 மணிக்கு அந்தமான் நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்துகிறார். அந்தக் கூட்டத்திற்கு பிறகு இரவு 10.55 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து அமித் ஷா டெல்லி புறப்பட்டு செல்கிறார்.