வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடுரோ நூலிழையில் உயிர் தப்பினார்!
வெனிசுலாவில் ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் இருந்து அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மடுரோ நூலிழையில் உயிர் தப்பினார்.
வெனிசுலாவில் இன்று ராணுவ அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. தலைநகர் காரகஸ் நகரில் நடைபெற்ற பேரணியை அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மடுரோ பார்வையிட்டார்.
அதை தொடர்ந்து அதிபர் நிக்கோலஸ் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தார் அப்போது ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் வெடிபொருள் விழுந்து வெடித்தது.
இதனால் அச்சம் அடைந்த வீரர்கள் அங்கு இருந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். கண்ணிமைக்கும் நேரத்தில் நடத்தப்பட்ட இந்த வெடிகுண்டு தாக்குதலில் இருந்து அதிபர் நிகோலஸ் மடுரோ அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
இந்த தாக்குதலில் 7 வீரர்கள் காயமடைந்தனர். அதிபர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே அமெரிக்க,கொலம்பியா நாட்டைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள் தான் அதிபர் நிக்கோலஸ் மடுரோவை கொல்ல முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.