fbpx
Others

பிரிட்டன்பிரதமர் ஸ்டார்மர் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு அதிரடிபதில்….

இது நமது போர் அல்ல; ஆனால் ஈரான் போர் நம்மை பாதிக்கும்” - பிரிட்டன் பிரதமர்  கெய்ர் ஸ்டார்மர்ஈரான் மீதான அமெரிக்க இஸ்ரேல் கூட்டுப்படைகளின் தாக்குதலால், மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தப் போவதாக ட்ரம்ப் கூறியுள்ள நிலையில், சமீபத்தில், தங்களுக்கு உதவாத இங்கிலாந்தை விமர்சித்து பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதற்கு தற்போது பதிலளித்துள்ள பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர், இது தங்களுடைய போரே அல்ல என்றும், அதற்குள் தாங்கள் இழுத்துச் செல்லப்பட மாட்டோம் என்று அதிரடியாக பதிலளித்துள்ளார். அவரது பேச்சு குறித்து விவரமாக அறியலாம்.மத்திய கிழக்கு போரால், ஈரான் முடக்கி வைத்துள்ள ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ராணுவ உதவிகள் செய்யுமாறு, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழைப்புவிடுத்தார்.ஆனால்,அவரதுகோரிக்கையைஏற்கஎந்தநாடும்முன்வரவில்லை.ஏற்கனவே ட்ரம்ப்பின் இந்த போரால், கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், உலக நாடுகளின் கோபம் ட்ரம்ப் மீது திரும்பியுள்ளது. அதோடு, சொந்த நாட்டிலேயே மக்கள் ட்ரம்ப்பிற்கு எதிராக தற்போது போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இஸ்ரேலுடைய போரில் தேவையில்லாமல் ட்ரம்ப் நுழைந்து, நாட்டின் பொருளாதாரத்தையே சிதைப்பதாகக் கூறி, மக்கள் போராடி வருகின்றனர்.இது, ட்ரம்ப்பிற்கு மிகவும் நெருக்கடியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. அதனால், தங்களுக்கு உதவாத நாடுகளை அவர் கடுமையாக சாடி வருகிறார்.அந்த வரிசையில், தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் போட்ட பதிவில், “ஹார்முஸ் ஜலசந்தியால் ஜெட் எரிபொருள் பெற முடியாத இங்கிலாந்து போன்ற, ஈரானின் தலையை துண்டிக்கும் செயலில் தலையிட மறுத்த அனைத்து நாடுகளுக்கும், என்னிடம் ஒரு யோசனை உள்ளது. முதலாவதாக, அமெரிக்காவிடமிருந்து வாங்குங்கள், எங்களிடம் நிறைய உள்ளது. இரண்டாவதாக, தாமதித்துவிட்டாலும் இப்போதாவது தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, அந்தஜலசந்திக்கு சென்று எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்காக போராடநீங்கள்கற்றுக்கொள்ளத் தொடங்க வேண்டும், நீங்கள் எங்களுக்காக உதவாதது போலவே, இனி உங்களுக்கு உதவ அமெரிக்கா இருக்காது.“என்றுகூறியிருந்தார்.மேலும்,“ஈரான்,அடிப்படையில்,முற்றிலுமாகஅழிக்கப்பட்டுவிட்டது. கடினமான பகுதி முடிந்துவிட்டது. உங்கள் சொந்த எண்ணெயை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்“ என்றும் ட்ரம்ப் தனது பதிவில் தெரிவித்திருந்தார்.இந்த சூழலில், லண்டனில் உள்ள டவுனிங் ஸ்ட்ரீட்டில் செய்தியாளர்களை சந்தித்த இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரிடம், ட்ரம்ப்பின் விமர்சனம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தங்கள் மீது எவ்வளவு அழுத்தங்கள் இருந்தாலும், அது எவ்வளவு சத்தமாக இருந்தாலும், இங்கிலாந்தின் தேசிய நலனுக்காகவே தன்னால் முடிவுகளை எடுக்க முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.மேலும், இது தங்களின் போரே அல்ல என்றும், அதில் தாங்கள் இழுத்துச் செல்லப்பட மாட்டோம் என்று கூறியுள்ளார். அதோடு, ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் உலகலாளவிய அமைதிக்கு, நேட்டோ மிகவும் முக்கியம் என்பதால், அந்த அமைப்பில் இங்கிலாந்து தொடர்ந்து நீடிக்கும் என்றும் கூறியுள்ளார் ஸ்டார்மர்.இங்கிலாந்தை கடுமையாக விமர்சித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிற்கு, இது நெத்தியடி பதிலாகவே பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close