அமெரிக்கா இஸ்ரேலுக்கு தகவல் தெரிவித்த சீனா….?
மத்திய கிழக்கில் நடைபெற்றுவரும் போரில், ஈரானுக்கு ஆதரவாகவும், உறுதுணையாக இருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது. இது குறித்து பேசியுள்ள சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, சீனா மற்றும் ஈரான் இடையேயான பாரம்பரிய நட்புறவை சீனா பெரிதும் மதிப்பதாக தெரிவித்துள்ளர்.மேலும், ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய கண்ணியத்தை பாதுகாப்பதில், ஈரானிற்கு சீனா ஆதரவளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதோடு, ஈரானின் சட்டப்பூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களை
பாதுகாப்பதில் சீனா உறுதுணையாக இருக்கும் என்றும் வாங் யி கூறியுள்ளார்.தொடர்ந்து, அமெரிக்காவும் இஸ்ரேலும் உடனடியாகதங்களதுராணுவநடவடிக்கைகளை நிறுத்தவேண்டும்என்றும்வாங்யிவலியுறுத்தியுள்ளார்.மேலும்,பதற்றங்கள்இன்னும்அதிகரிப்பதைதவிர்க்கவேண்டும்என்றும்,இந்தபோர்மத்தியகிழக்குபிராந்தியம்முழுவதும்பரவாமல்தடுக்கவேண்டும்என்றும்அவர்கேட்டுக்கொண்டுள்ளார். அதோடு,ஈரானுக்கு சீனா ஏவுகணைகளை வழங்க உள்ளதாக வெளியான தகவல்களை வாங் யிமறுத்துள்ளார் .கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்க இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய நிலையில், ஈரானும் பதிலடி கொடுக்கத் தொடங்கியது. இந்த சூழலில், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்ளிட்ட பல முக்கியதலைவர்கள்கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்தஈரான்,கமேனிகொலைக்குபழிவாங்குவோம்எனசூளுரைத்தது.அதைத்தொடர்ந்து,தனதுதாக்குதல்களைதீவிரப்படுத்திய ஈரான், துபாய்உள்ளிட்டவளைகுடாநாடுகளையும் கடுமையாக தாக்கத் தொடங்கியது. இதையடுத்து, அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து வளைகுடா நாடுகளும் பதிலடி கொடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த போரில் அவர்களும் இணையும் பட்சத்தில், இது மிகப் பெரிய ஒரு போராக மாற வாய்ப்புள்ளது. ஏற்கனவே சீனா ஈரானுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஒருவேளை அவர்களும் ஈரானுக்கு ராணுவ ரீதியாக உதவ ஆரம்பித்தால், நிச்சயம் இது ஒரு பிராந்திய போராக மாறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.