fbpx
Others

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய அடுக்குமாடிகுடியிருப்புகளை திறந்து வைத்தார்..

1510 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து  வைத்தார், 1510 new apartments inaugurated by Chief Minister M.K. Stalinதமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் வரலாற்றில் முதல்முறையாக இன்று (2.3.2026) ஒரேநாளில் மறு கட்டுமானத்திட்டத்தின்கீழ், சென்னையில் 9 திட்டப்பகுதிகளில் 696.55 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4.035 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள். அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வெளி மாவட்டங்களில் 4 திட்டப்பகுதிகளில் 144.21 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1,332 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், என மொத்தம் 13 திட்டப்பகுதிகளில் 840.76 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 5367 குடியிருப்புகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார். மேலும், 2 திட்டப்பகுதிகளில் 420.34 கோடிரூபாய்மதிப்பீட்டில்1984புதியஅடுக்குமாடிக்குடியிருப்புகள்கட்டுவதற்குஅடிக்கல்நாட்டினார்.தமிழ்நாட்டில் வாழும் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டு வசதியினை ஏற்படுத்தி தரும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1970-ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது. நகர்ப்புற ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வீட்டுவசதி வாய்ப்புகள் மட்டுமே போதுமானதாக இருக்காது. அவர்களுக்கு குடிநீர், சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, கல்வி, மருத்துவ வசதி, திடக்கழிவு மேலாண்மை, பொது வெளியிடம் போன்ற போதுமான நகர்ப்புற வசதிகளுடன் வீட்டுவசதி ஏற்படுத்துவது அவசியம் என்று கருதிமு க ஸ்டாலின், திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 1.9.2021 அன்று தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் பெயரினை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்து ஆணையிட்டார். குடிசைகளை மாற்றுவது மட்டுமல்ல குடிசைகளில் வாழும் மக்களுடைய வாழ்வாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.* தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய புதிய குடியிருப்புகளை திறந்து வைத்து, புதிய குடியிருப்பு கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் மறு கட்டுமானத் திட்டத்தின் கீழ், ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் டாக்டர் தாமஸ் சாலை திட்டப்பகுதியில் நடைபெற்ற விழாவில், டாக்டர் தாமஸ் சாலை திட்டப்பகுதியில் 77.75 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 470 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும், சுபேதார் கார்டன் திட்டப்பகுதியில் 57.32 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 300 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும், அப்பாசாமி முதலி தெரு திட்டப்பகுதியில் 12.90 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 68 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும். பெரியபாளையத்தம்மன் கோயில் திட்டப்பகுதியில் 5.72 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 32 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும் முதலமைச்சர் இன்றைய தினம் திறந்து வைத்து, பயனாளிகளுக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.மேலும், கிரீம்ஸ் சாலையில் உள்ள குடிசைகளை அகற்றி அப்பகுதி மக்களுக்கு வீடுகள் வழங்க 46.12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 283 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும் பணிக்கு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.மயிலாப்பூர் சட்டமன்றத் திட்டப்பகுதியில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் அவர்கள் குயில் தோட்டம் திட்டப்பகுதியில் 65.02 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 384 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும், வன்னியபுரம் திட்டப்பகுதியில் 36.92 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 216 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும் திறந்து வைத்து. பயனாளிகளுக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் கோட்டூர்புரம் திட்டப்பகுதியில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கோட்டூர்புரம் திட்டப்பகுதியில் 307.24 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 1800 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும், அப்பாவு நகர் மற்றும் சுப்புபிள்ளை தோட்டம்CM MK Stalin Speech he DMK movement cannot be seen, even touched by any horn திட்டப்பகுதியில் 88.05 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 522 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும். இராயபுரம் சட்டமன்றத் தொகுதியில்செட்டித்தோட்டம்திட்டப்பகுதியில்45.63கோடிரூபாய்செலவில்கட்டப்பட்ட243புதியஅடுக்குமாடிக்குடியிருப்புகளையும்;கோயம்புத்தூர் மாவட்டம், அவிநாசி சட்டமன்றத் தொகுதியில் முல்லைநகர் திட்டப்பகுதியில் 38.79 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 348 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும், வால்பாறைசட்டமன்றத்தொகுதியில் வால்பாறை திட்டப்பகுதியில் 12.27 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 80 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும்:மதுரை மாவட்டம், திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் கரடிக்கல் புதிய திட்டப்பகுதியில் 85.88 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 840 அடுக்குமாடி குடியிருப்புகளையும்:திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் ஜெயில்பேட்டை பகுதி 2 திட்டப்பகுதியில் 7.27 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 64 புதிய அடுக்குமாடிகுடியிருப்புகளையும்தமிழ்நாடுமுதலமைச்சர்அவர்கள்திறந்துவைத்தார்.சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் பெரும்பாக்கம் திட்டப்பகுதியில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள் கொண்ட விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்து. மேலும், சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் சிட்கோ நகர் திட்டப்பகுதியில் 374.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1701 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் பெரும்பாக்கம் திட்டப்பகுதியில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதல்வர் படைப்பகம் கட்டுவதற்கு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.கோட்டூர்புரம் திட்டப்பகுதியில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்து. பயனாளிகளுக்கு குடியிருப்புக்கானஒதுக்கீட்டுஆணைகளைவழங்கினார்.மேலும்,அக்குடியிருப்புவளாகத்தில்மரக்கன்றைநட்டுவைத்து,அக்குடியிருப்புகளை பார்வையிட்டு பயனாளிகளிடம் அங்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அத்துடன் அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடைப்பந்துவிளையாட்டுமைதானத்தைபார்வையிட்டு.அங்குபயிற்சியில்ஈடுபட்டவீரர்களுடன்கலந்துரையாடினார்.தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் வரலாற்றில் முதல்முறையாக இன்று ஒரே நாளில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 13 திட்டப்பகுதிகளில் 840.76 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 5367 குடியிருப்புகளை திறந்து வைத்தார் என்பது சிறப்புக்குரியதாகும். மேலும், 2 திட்டப்பகுதிகளில் 420.34 கோடி ரூபாய் மதிப்பீட்டில்1984புதியஅடுக்குமாடிக்குடியிருப்புகள்கட்டுவதற்குஅடிக்கல்நாட்டினார்.இப்புதிய குடியிருப்புகள், ஒவ்வொன்றும் தலா 400 சதுர அடி பரப்பளவுடன், ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும். அனைத்து குடியிருப்பு வளாகங்களும், தார் சாலை வசதி, குடிநீர்வசதி, கழிவு நீரேற்று வசதி. மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசால் இந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 209 திட்டப் பகுதிகளில் 74,126 அடுக்குமாடி குடியிருப்புகள் வீடற்ற ஏழை மக்களுக்காகவும் எளிய குடிசைப் பகுதிகளில் வாழும்மக்களுக்காகவும்திறந்துவைக்கப்பட்டுள்ளதுஎன்பதுகுறிப்பிடத்தக்கது.,இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர  சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன். சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் நா.எழிலன், த.வேலு, துணை மேயர் மு. மகேஷ் குமார். பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் நே. சிற்றரசு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா. பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா பி. சிங், வாரிய இணை மேலாண்மை இயக்குநர் ந.பிரியா ரவிச்சந்திரன், வாரிய தலைமை பொறியாளர்கள் லால் பகதூர், வி.எஸ். கிருஷ்ணசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close