fbpx
Others

எடப்பாடி பழனிசாமியுடன், ஓ.பன்னீர் செல்வம் இணைவாரா….?

எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.. முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு ஓ பன்னீர் செல்வம் வைத்த டிமாண்ட் | Real culprits should be found in Kodanad case; O Panneer Selvam Urges ...தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க தினந்தோறும் புதிய, புதிய மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திமுகவை வீழ்த்த பலம் வாய்ந்த கூட்டணியை அதிமுக உருவாக்கி வருகிறது. இதற்காக எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைக்கும் வகையில், பாஜகவை தனது அணியில் இணைத்த எடப்பாடி பழனிசாமி, அடுத்தாக கடந்த 8 வருடங்களாக எதிரும்புதிருமாகஇருந்தஅம்மாமக்கள்முன்னேற்றக்கழகபொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அதிமுக கூட்டணியில் இணைத்தார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வமும் மீண்டும் அதிமுக கூட்டணி இணைவாரா அல்லது நடிகர் விஜய்யின் தவெக அணியில் இணைவாரா என எதிர்பார்ப்பு எழுந்தது.இந்த நிலையில், தேர்தலில் அடுத்தக்கட்ட முடிவு தொடர்பாக ஆலோசிக்க முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தேனியில் அவரச ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். பெரியகுளம் அருகே உள்ள தனது பண்ணை வீட்டில்ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது,  தொண்டர்களின் விருப்பம் மற்றும் கருத்துக்களை துண்டு சீட்டில் எழுதித் தருமாறு ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ் தெரிவித்தார்.இதற்கு சில நிர்வாகிகள் ஆதரவும்,சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர்.ஒரு சில நிர்வாகிகள் கூட்டணி குறித்து தாங்கள் எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் மாறி மாறி கருத்துக்களை கூறியதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், கூட்டணி குறித்துஎன்னுடையநிலைபாடுதொடர்பாகயூகங்கள்அடிப்படையில்வதந்திகள்பரப்புவதை  ஊடகங்கள்தவிர்க்கவேண்டும்அதுதான்ஜனநாயகத்திற்கு அழகு  என கூறினார். சட்டபோராட்டம் நடத்தி வரும் இயக்கமாக அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் செயல்பட்டு வருகிறதுஎங்களிடம் தொண்டர்கள் இருக்கிறார்களா என்பதற்காக ராமநாதபுரத்தில் பலாப்பழ சின்னத்தில் சுயேட்சையாக  போட்டியிட்டேன் அப்போது எவ்வாறெல்லாம் இடையூறு  செய்தார்கள் என்று உங்களுக்கே தெரியும். தொண்டர்களின் உரிமை காக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த இயக்கம் செயல்பட்டு வருகிறது அதற்காகத்தான் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம் தற்போது வரை அதிமுக ஒன்றிணைைய வேண்டும் என்பதுதான்நோக்கமே தவிர நான் தனியாக வெற்றி வேண்டும்  பெற கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக இல்லை. அதிமுகவை மீட்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. தேர்தலில் போட்டியிடுவதற்காக தொடங்கப்படவில்லை.தனிக்கட்சி ஆரம்பிக்கும் எண்ணமோ, தேர்தலில் போட்டியிடும் எண்ணமோ தற்போது வரை இல்லையெனவும் தெரிவித்தார்.  எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 2வது தர்மயுத்தம் தொடங்குவதற்கு வைத்திலிங்கமும், மனோஜ் பாண்டியனும் தான் காரணம் எனவும் கூறினார்.அதிமுகவில் இணைய நான் தயாராக இருப்பதாவும், எனது அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமி தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தார். எனவே இதனை அவரிடம் கேட்டு சொல்லுங்கள் என கூறினார்.  மேலும் எதிரும் புதிருமாக இருந்த டிடிவி தினகரன் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளார். மேலும் எங்கள் அணி அதிமுகவில் இணைய டிடிவி தினகரன் நடவடிக்கை எடுக்க வேண்டும்எனவும் ஓபிஎஸ் கேட்டுக்கொண்டார்.

Related Articles

Back to top button
Close
Close