fbpx
Others

பாகிஸ்தானுக்கு சொந்த நாட்டிலேயே சில சமயம் எதிர்ப்பு ….?

pakistan-army-chief-asim-munir-claims-divine-help-during-operation-sindoor-clashஆப்கானிஸ்தானுக்குள் அத்துமீறி தாக்குதலை நடத்திவிட்டு அதை நியாயப்படுத்தினால், இந்தியா தாக்கும் போது அதை எப்படி ஆட்சேபிக்க முடியும் என்று பாகிஸ்தான் நாட்டு எம்பி ஒருவர், அந்நாட்டு ராணுவ தளபதி ஆசிம் முனீருக்கு கேள்வி எழுப்பும் வகையில் பேசியுள்ளார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்குள் பயங்கரவாத முகாம்களை இந்தியா துல்லிய தாக்குதல் நடத்தி அழித்ததை சுட்டிக்காட்டி பாகிஸ்தான் எம்பி பேசியுள்ளார்.இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளை தூண்டிவிட்டு சதி வேலை செய்யும் பாகிஸ்தானுக்கு சொந்த நாட்டிலேயே சில சமயம் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அந்த வகையில்தான், பாகிஸ்தானின் செயலை அம்பலப்படுத்தியுள்ள அந்நாட்டை சேர்ந்த எம்பி ஒருவர், பாகிஸ்தான் செயல்பாட்டை சுட்டிக்காட்டி, இப்படியே செயல்பட்டால் இந்தியாவை எதிர்ப்பதை எப்படி நியாயப்படுத்துவீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.பாகிஸ்தானில் ஜமியத் உலேமா-இ-இஸ்லாம் எஃப் (JUI-F) என்ற கட்சியை நடத்தி வருபவர் மவுலானா ஃபஸ்லூர் ரெஹ்மான். இவர் அந்நாட்டு எம்பியாகவும் உள்ளார். கராச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரெஹ்மான் கூறியதாவது:-ஆப்கானிஸ்தானில் நமது எதிரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று கூறி நியாயப்படுத்தினால், பஹவால்பூர், முரிட்கேவில் தாக்குதல் நடத்திவிட்டு, காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்களின் தலைமை அலுவலகம் உள்ளது என்று இந்தியாவாலும் சொல்ல முடியும். பிறகு எப்படி நீங்கள் அதற்கு ஆட்சேபம் தெரிவிப்பீர்கள். பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் அதே குற்றச்சாட்டை முன்வைக்கிறது. இரண்டு நிலைகளிலும் நீங்கள் எப்படி நியாயப்படுத்துவீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.பாகிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தானை குற்றம் சாட்டும் பாகிஸ்தான், அண்மையில் காபூல் நகரில் வான்வழி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் இந்த அடாவடி செயலால், ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்களும் பலியாகினர். இதனை குறிப்பிட்டே ரெஹ்மான் மேற்கண்டவாறு பாகிஸ்தான் அரசை சாடியுள்ளார்.அதாவது, பாகிஸ்தான் தனது எல்லை தாண்டிய தாக்குதலை நியாயப்படுத்தினால், பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக இந்தியா பாகிஸ்தான்pakistan-mp-questions-islamabad-s-double-standards-on-india-after-kabul-strike எல்லைக்குள் நுழையும்போது, அதை ஆட்சேபிக்க பாகிஸ்தானுக்கு எந்த முகாந்திரமும் இல்லை” என்று கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம்பயங்கரவாதிகள்நடத்தியதாக்குதலில்அப்பாவிசுற்றுலாபயணிகள்26பேர்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் பின்னணியில் இருந்ததால், பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள அவர்களின் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தியா நடத்திய இந்த தாக்குதலில் பாகிஸ்தான் எல்லை மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டு இருந்த பயங்கரவாதிகளின் தளங்கள் தவிடுபொடியாகின. பாகிஸ்தானுக்குள் இருந்த பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்ததற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த பாகிஸ்தான், இந்தியா மீது பதிலடி தாக்குதலை தொடுத்தது. பலத்த அடி வாங்கினாலும்.. ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட எல்லையோர பகுதிகளில் டிரோன்களை கொண்டு தாக்கியது. பாகிஸ்தானின் டிரோன்களை இந்தியா தனது வான்பாதுகாப்பு அமைப்புமூலம்நொறுக்கியது. அதுமட்டும் இன்றி பிரமோஸ் உள்ளிட்ட ஏவுகணைகளை கொண்டு பதிலடி கொடுத்தது. இதனால், கதி கலங்கிய பாகிஸ்தான், இந்தியாவிடம் கேட்டுக்கொண்டதால் சண்டை நிறுத்தம் ஏற்பட்டது.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பாகிஸ்தான்  அவ்வப்போது இந்தியாவை சீண்டும் வகையில் அந்நாட்டு அரசியல்வாதிகள் பேசி வருவதைவாடிக்கையாக கொண்டுள்ளனர்.ஆப்கானிஸ்தானில்கடந்த2021ஆம்ஆண்டுதாலிபான்கள்ஆட்சிஅதிகாரத்தைகைப்பற்றினர்.  ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைந்ததில் இருந்தே அண்டை நாடான பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே உரசல்கள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் தாலிபான் அரசு அடைக்கலம் கொடுப்பதாக இஸ்லாமாபாத் குற்றம் சாட்டுகிறது. ஆனால், இதனை திட்டவட்டமாக ஆப்கானிஸ்தான் மறுத்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close