fbpx
Others

திமுக அரசை வலியுறுத்திய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்…

2026-ல் ஆட்சி மாற்றம் நடைபெறுவது உறுதி - பாஜக தலைவர் நயினார்“வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தேனிக்கு முதல்வர் ஸ்டாலின் விரைந்து சென்று போர்க்காலஅடிப்படையில் வெள்ள பாதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பாக மக்களை வைத்திட முகாம்கள் அமைக்க வேண்டும்” என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்முல்லை பெரியாறில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் தேனி மாவட்டம் உத்தமபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது. 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டிருப்பதால் கடும் சேதத்தை கண்டிருப்பதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தேனி மாவட்டத்தில் முல்லை பெரியாறு ஆற்றங்கரையோரம் உள்ள வீரபாண்டி, உப்புக்கோட்டை, உத்தமபாளையம், பழனிசெட்டிபட்டி ஆகிய பகுதிகளை தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் திண்டாடி வருகின்றனர்.முல்லை பெரியாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததன் காரணமாக பலரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, தனியார் விடுதிகளில் அடைக்கலம் புகுந்தனர். மேலும், தண்ணீரில் சிக்கித் தவித்தவர்கள், ஜேசிபி மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தேனி மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தேனிக்கு முதல்வர் ஸ்டாலின் விரைந்து சென்று போர்க்கால அடிப்படையில் வெள்ள பாதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எழில் கொஞ்சும் தேனி மாவட்டம், தற்போது கடும் வெள்ளத்தில் சிக்கி அவதியுறுவதைக் கண்டு நெஞ்சம் பதைபதைக்கிறது. வரலாறு காணாத தொடர் மழையால் வெள்ளம்ஏற்பட்டுள்ளதாகக்கூறப்பட்டாலும், இது ஒரு விதத்தில் திமுக அரசால் உருவாக்கப்பட்ட மனிதப் பேரிடரே. பருவ மழை துவங்கும் முன்பே, கால்வாய்களைத் தூர்வாரி, நீர்நிலைகளைப் பேணி இருந்தால் இதுபோன்றதொரு பேரிடர்ஏற்பட்டிருக்குமா? பருவ மழையை முன்கூட்டியே கணித்து உரிய முன்னேற்பாடுகளைச் செய்து, மக்களை எச்சரித்து இருந்தால், இது போன்ற சேதம் தான் ஏற்பட்டிருக்குமா?முல்லைப் பெரியாறு அணையில் நான்குBJP Leader Nainar Nagendran Urges CM Stalin to Visit Flood-Hit Theni and Launch Relief Measures நாட்களுக்கு முன்பு வரை 1,000 கனஅடி நீர் மட்டுமே திறந்துவிடப்பட்ட நிலையில், நேற்று இரவு மட்டும் தமிழக நீர்வளத்துறையால் 7,163 கன அடி நீர் திறந்துவிடப்பட்டிருப்பது தான் வெள்ளத்திற்கான காரணமோ என்ற சந்தேகமும் எழுகிறதுமொத்தத்தில் திமுக அரசின் அலட்சியத்தால் நள்ளிரவில் தங்கள் வீடுகளை இழந்தும், கால்நடைகளைப் பறிகொடுத்தும், வயல்வெளிகள் சேதமாகியும் வாழ்வாதாரமின்றி மக்கள் தவிக்கும் போது, மீட்புப்பணியைத் துரிதப்படுத்தாமல் மெத்தனமாக இருக்கிறது விளம்பர மாடல் அரசு. முதல்வர் ஸ்டாலின் உடனடியாகத் தேனி விரைந்து சென்று போர்க்கால அடிப்படையில் வெள்ள பாதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பாக மக்களை வைத்திட முகாம்கள் அமைக்க வேண்டும். மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உரிய இழப்பீடு வழங்கி கைகொடுக்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close