fbpx
Others

கடலூரில் ஒரு நம்பர் லாட்டரி ( சுரண்டல் ) விற்பனை அமோகம் 4பேர் கைது…

நாகையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் கட்டுக்கட்டாக விற்பனை: 3 பேர்  கைது | Three arrested for selling banned out of state lottery - kamadenu  tamilஏழை, எளிய மக்கள், தொழிலாளர்கள் குடும்பங்களை சீரழித்து வரும் லாட்டரி சீட்டுகளுக்கு, தமிழக அரசு கடந்த 2003ல் தடையை விதித்தது. சுரண்டல் லாட்டரியால் அதாவது ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை வாங்கி ஏராளமான குடும்பங்கள் பணத்தை இழந்தன.. இதனால் இந்த குடும்பங்களை காப்பதற்காகவே தமிழக அரசு அப்படியொரு நடவடிக்கையை எடுத்தது.
எனினும்,கேரளாஉள்ளிட்டவடமாநிலங்களில்லாட்டரிசீட்டுஇன்னும்தடைசெய்யப்படவில்லை. சில வருடங்கள் அமைதி காத்த லாட்டரி உரிமையாளர்கள், இப்போது மீண்டும் தீவிரமாக லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள லாட்டரி சீட்டுக்களை கொண்டு வந்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். தினமும், காலை முதல் மதியம் வரை, குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே, ஒரு நம்பர் லாட்டரி விற்பனை அமோகமாக நடக்கிறது. ஆட்டோ டிரைவர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், மார்க்கெட் வியாபாரிகள், காய்கறி வியாபாரிகள், தள்ளுவண்டி கடைக்காரர்கள் இப்படியானவர்களை மட்டுமேCuddalore Lottery ticket BJP குறிவைத்துவிற்பனைநடக்கிறது.நடுத்தர,ஏழைகுடும்பங்களை சேர்ந்தவர்கள், ஒரு நம்பர்லாட்டரிசீட்டுக்குஅடிமையாகி, தினமும்நுாற்றுக்கணக்கில்பணத்தைஇழந்துவருகின்றனர்.மேலும்,வடமாநிலலாட்டரிசீட்டுகள்கம்ப்யூட்டர்மூலம்விற்பதாகவும்சிலர்இந்தவிற்பனையில் ஈடுபட்டு, . 60 ஆயிரம் ரூபாய் வரை விற்பனைசெய்கிறார்கள்.நாள்தோறும் ஓடி ஓடி உழைத்து களைக்கும் தொழிலாளிகள், நமக்கும் அதிர்ஷ்டம் அடிக்காதோ? என்று ஏக்கத்தில் லாட்டரி வாங்குகிறார்கள்.. இதற்காக சம்பளத்தில் பெரும் தொகையையும் செலவழிக்க நேரிடுகிறது.அந்தவகையில்,கடலூர்மாவட்டத்திலும்லாட்டரிவிற்பனைதலைதூக்கியிருப்பதாக கூறப்படுகிறது.. கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம் போன்ற பகுதிகளிலும் லாட்டரி விற்பனைநடக்கிறதாம்..அதுமட்டுமல்ல,சிலர்,கேரளாவுக்குவேலைசெய்வதாகவீட்டில்சொல்லி,இதேலாட்டரிவிற்பனையில்லாபம்பார்த்துவருகிறார்களாம்.எனவே,இந்தலாட்டரிவிற்பனையைமுற்றிலும்தடுக்கமாவட்டநிர்வாகம்,போலீசார்நடவடிக்கைஎடுக்கவேண்டும்என்றுசமீபகாலமாகவேகோரிக்கைகள்வலுத்துவருகின்றன.  இந்நிலையில், இதே கடலூர் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. அதாவது அங்குள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கிடைத்திருக்கிறது..உடனேபுதுநகர் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஜெயராமன் என்ற 62 வயது நபர் மீது சந்தேகம் வலுத்தது.. அவரை பிடித்து விசாரித்தபோது, ஆன்லைனில் லாட்டரி சீட்டு விற்பவர் என்பதும் இவருக்கு அவரது மனைவி மல்லிகா (வயது 55), மகன் சாரதி, புதுப்பாளையத்தைசேர்ந்தபிரகாஷ்(வயது44)ஆகியோர்உடந்தையாகஇருப்பதும்தெரியவந்தது..இதையடுத்து4பேரையுமேபோலீசார்விசாரித்து,கைதுசெய்தனர்..அவர்களிடமிருந்துஆன்லைன்லாட்டரிசீட்டுவிற்பனைசெய்வதற்குபயன்படுத்திய 5 செல்போன்கள், லாட்டரி சீட்டு விற்ற பணம் ரூ. 22 லட்சத்து 94 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதில், கைதாகியிருக்கும் ஜெயராமன் மீது ஏற்கனவே 18 லாட்டரி வழக்குகளும், பிரகாஷ் மீது 3 லாட்டரி வழக்குகளும் இருக்கிறதாம்.. அதுமட்டுமல்ல, பிரகாஷ் அந்த பகுதியில் பிரபல பாஜக பிரமுகர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அதாவது கடலூர் பாஜக நெசவாளர் அணி நிர்வாகியாக செயல்பட்டு வருகிறாராம்.. தற்போது மனைவி, மகனுடன் இந்த பாஜக பிரமுகர் கைதாகி உள்ளது, கடலூரில் பரபரப்பை தந்து வருகிறது. கடலூரில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக சமீப நாட்களாகவே புகார்கள் எழுகின்றன. மீண்டும் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை கடலூரில்   படுவிறுவிறுப்பாக நடப்பதாகவும் இதனால்ஏழைஎளியதொழிலாளர்குடும்பங்கள்பெருமளவில்பாதிக்கப்பட்டுவருவதாகவும்கூறப்படுகிறது.எனவே,உடனடியாகலாட்டரி  சீட்டுவிற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தவண்ணம் உள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close