அமித்ஷா வை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திடீர் டெல்லி பயணம் ..
![]()
அதிமுகவில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார்.அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கடந்த சில வாரங்களாக 2026இல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை குறிவைத்து ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் மாவட்டவாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில், கட்சியில் இருந்து பிரிந்து போனவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் கோரிக்கை வைத்தார்.இதனை தொடர்ந்து அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து இபிஎஸ் அதிரடியாக நீக்கினார். இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு ஹரிதுவார் செல்வதாக டெல்லி சென்ற செங்கோட்டையன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியானது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.இந்த நிலையில் தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிச்சாமி தனது பரப்புரையை இரண்டு நாட்கள் ஒத்திவைத்துவிட்டு இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.அவருடன் அதிமுக முக்கிய நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, எஸ்பி வேலுமணி ஆகியோரும் டெல்லி புறப்பட்டு சென்று உள்ளனர். டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமிபுதிதாகதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுணைகுடியரசுதலைவர்சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார். மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக முக்கிய நபர்களை சந்தித்து ஆலோசனைமேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த சந்திப்பில் அதிமுக -பாஜக கூட்டணியை வலுப்படுத்துதல் குறித்தும்,கட்சியிலிருந்துநீக்கப்பட்டஅதிமுகநிர்வாகிகள்குறித்தும்தனதுகருத்தைஎடப்பாடி பழனிசாமி,அமித்ஷாவிடம்தெரிவிப்பார்என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாகநேற்று பரப்புரை கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு போனவர்களை மீண்டும் கட்சியில் எப்படி சேர்க்க முடியும்?” என்றும்கேள்விஎழுப்பியிருந்தார். அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இபிஎஸ் டெல்லி பயணம் அதிமுக நிர்வாகிகளிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது..