நெல்லைமாவட்டம் களக்காடு அருகே கந்துவட்டி அராஜகம்…..?
நெல்லைமாவட்டம் களக்காடு அருகேயுள்ள மஞ்சுவிளைதெற்குத்தெருவில் பீட்டர்
த/பெ. சௌந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். அவர் களக்காடு பகுதியில் சட்டகளஞ்சியம் நிருபராக பணியாற்றி வருகிறார். அதே ஊரைச்சார்ந்த இம்மானுவேல் மற்றும் அவரது மனைவி மேகலா(எ) டெய்ஸி ஆகிய இருவரும் வட்டித் தொழில் செய்து வருகின்றனர். மேற்படி மனுதாரர் பீட்டர் என்பவருக்கும் அவர்களுக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்துள்ளது.இது சம்மந்தமாக மதுரை ஹைகோர்ட்டில் பிரச்சினை முடித்து வைக்கப்ப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் நேற்று வேலை முடிந்து செல்லும் போது இரவு நேரத்தில் வழிமறித்து மிகவும் ஆபாசமாக பேசி கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இது சம்மந்தமாக களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.மேற்படி கொலைமிரட்டல் விடுத்த இரு நபர்கள் மீதும் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டும் எனசட்டகளஞ்சியம் கோரிக்கை வைக்கிறது.

