ஏமன்– நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து….
நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ஏமன் ரத்து செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 10 நாட்களாகவே இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், இதில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு, அவர் இந்தியா அழைத்து வரப்படுவார் என்று பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்திய Global Peace Initiative அமைப்பின் தலைவர் டாக்டர் கே.ஏ. பால் தெரிவித்துள்ளார்.ஏமன் நாட்டை சேர்ந்த மஹ்தி என்பவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே நிமிஷா பிரியா சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார். அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டையை விதித்திருந்தது. சட்ட வாய்ப்புகள் அனைத்தும் முடிந்த நிலையில், இம்மாத தொடக்கத்தில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இதற்கிடையே மத்திய அரசு உட்பட பல்வேறு தரப்பும் எடுத்த முயற்சியைத் தொடர்ந்து மரண தண்டனை நிறுத்திவைக்கப்பட்டது. கடந்த 10 நாட்களாகவே இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், இதில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏமன் நாட்டில் இருந்த Global Peace Initiativeஅமைப்பின்தலைவர்டாக்டர்கே.ஏ.பால்இதுதொடர்பாகவீடியோவைவெளியிட்டுள்ளார்நிமிஷா பிரியா மரண தண்டனை ரத்து செய்யப்படுகிறது என்றும் நிமிஷா பிரியா விடுதலை செய்யப்பட்டு, இந்தியா அழைத்துச் செல்லப்படுவார் என்றும் டாக்டர் கே.ஏ. பால் தெரிவித்துள்ளார்.