Others
தென்காரவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்ற தொடக்கவிழா..
நீடாமங்கலம் – தென்காரவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்ற தொடக்கவிழா இன்று (21.07.2025) பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெற்றது. விழாவிற்கு வட்டாரக் கல்வி அலுவலர் இன்பவேணி தலைமையேற்றார். வட்டாரக் கல்வி அலுவலர் மணிகண்டன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சத்யா, ஆசிரியப் பயிற்றுநர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கலந்துகொண்ட அனைவரையும் தலைமையாசிரியர் தர்மராஜ் வரவேற்றார். வானவில் மன்ற கருத்தாளர் சுபா அறிவியல் மற்றும் கணித பகுதியிலுள்ள கடினமான பகுதிகளை எளிய செய்முறைகளை செய்து காட்டி விளக்கினார். பட்டதாரி ஆசிரியர் அன்பழகன் நன்றி கூறினார். முன்னதாக விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஜூலியட் மேரி கண்ணதாசன், மைவிழி, உதயா, ஹரிணி ,செல்சியா மற்றும் AI கலையரசி ஆகியோர் செய்திருந்தனர்.
அரசு செய்திகளுக்காக
எஸ் சுரேஷ் நீடாமங்கலம்



