நாளை டெல்லிக்கு பயணிக்கும் அன்புமணி…?
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் நிலவி வரும் சூழலில், நாளை திடீரென அன்புமணி டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே பாமகவில் தனக்கே முழு அதிகாரம் இருப்பதாகஅன்புமணிபேசிவரும்நிலையில்,அன்புமணியின்டெல்லிபயணம்மீதானஎதிர்பார்ப்புஅதிகரித்துள்ளது.பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி இடையிலான மோதல் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கி செயல் தலைவராக ராமதாஸ் நியமனம் செய்தார். அதேபோல் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது, தாய் மீது பாட்டில் வீசியது, செளமியாவை அரசியலுக்கு கொண்டு வந்தது என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை ராமதாஸ் முன் வைத்தார்.அதேபோல் அன்புமணியிடம் தலைவருக்கான பண்பே இல்லாததால், கடைசி மூச்சு இருக்கும் வரை தாமே தலைவர் பதவியை வைத்து கொள்ள உள்ளதாக ராமதாஸ் கூறினார். இதனைத் தொடர்ந்து அன்புமணி சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், ராமதாஸ் பேசும் அத்தனையும் பொய்கள் தான். அவர் கடந்த 5 ஆண்டுகளாக ஒரு குழந்தையை போல் மாறிவிட்டார்.பாமகவில் முழு அதிகாரம் எனக்கு தான். பாமக சட்ட விதிகளின்படி பொதுக்குழுவை பாமக நிறுவனர் வழிகாட்டுதலின்படி கூட்ட வேண்டும் என்றுதான் உள்ளது. ஆனால் அதிகாரமிக்கவர் நிறுவனர் என்ற சட்டவிதி கிடையாது. பாமகவில் பயிர் எது? களை எது? என்று இப்போதுதான் தெரிகிறது. பொதுக்குழுவை கூட்ட, கட்சியை நடத்த தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய மூவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.பெற்ற மகனையும்,
மருமகளையும் யாராவது பொது வெளியில் விமர்சிப்பார்களா? அவர் ராமதாஸாக இருந்திருந்தால் அப்படி பேசி இருப்பாரா? என்று கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து பாமக எம்எல்ஏ அருள் கடுமையாக அன்புமணியை விமர்சித்துள்ளார். இதனால் பாமக இரண்டாக பிரியும் சூழல் உருவாகி இருக்கிறது.இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி நாளை டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது தேர்தல் ஆணையத்தில் பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிக்கைகளை சமர்ப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், பாமகவின் சட்ட விதிகள் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்க உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் அன்புமணி பாஜக உடன் கூட்டணி அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஆடிட்டர் குருமூர்த்தி ராமதாஸை சந்தித்து சமரச பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தற்போது அன்புமணி பாஜக தலைவர்களை சந்திக்க இருப்பது பலரின் கவனத்தையும் திருப்பி இருக்கிறது.?