Others
ராணிப்பேட்டை–ராகுல் காந்தியின் 55 ஆவது பிறந்தநாள் விழா..
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வீசி மோட்டூர் பேருந்து நிறுத்தம் அருகில் காங்கிரஸ் ஒன்றியம் சார்பில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 55 ஆவது பிறந்தநாள் விழா கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய துணைத் தலைவர் சண்முகம், ஒன்றிய கவுன்சிலர் வசந்தி கணேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.