பண்ணாரி செக் போஸ்ட் தடுப்பில் கன்டெய்னர் லாரி சிக்கி போக்குவரத்து பாதிப்பு
சத்தி, ஏப்.26 – பண்ணாரி செக் போஸ்ட் தடுப்பில் கண்டெய்னர் லாரி சிக்கி போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் அவதி
சத்தி அடுத்த பண்ணாரி அருகே மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் திம்பம் மலைப்பாதை தொடங்கும் இடத்தில் போலீஸ் , ஆர்டிஓ , வனத்துறை செக் போஸ்ட்கள் உள்ளது. திம்பம் மலைப்பாதை 27 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. தமிழக – கர்நாடக எல்லை என்பதால் தினசரி ஏராளமான வாகனங்கள் வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகின்றன. திம்பம் மலைப்பாதை வழியாக ஓவர் லோடு ஏற்றி வரும் வாகனங்களை கண்டறிய ஆசனூர் மற்றும் பண்ணாரி செக்போஸ்டில் இரும்பினால் ஆன தடுப்பு உள்ளது. இதில் நுழையும் வாகனங்கள் உயரமான மற்றும் அகலமான லோடு ஏற்றி வந்தால் செல்ல முடியாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவையிலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு சென்ற கன்டெய்னர் லாரி பண்ணாரி செக் போஸ்ட் தடுப்பு கம்பியில் சிக்கி கொண்டது. இதன் காரணமாக அந்த வழியாக சென்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் லாரியை நகர்த்தியதை அடுத்து வாகனங்கள் செல்ல தொடங்கியது. இச்சம்பவத்தால் இரு மாநிலங்களுக்கு இடையே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.