fbpx
Others

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் தேசிய சாலை பாதுகாப்பு பேரணி…

தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் திேசய சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்படுகின்றது. இதில் ஒரு பகுதியாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெறுவது வழக்கம். அதனை தொடர்ந்து, கோட்டப்பொறியாளர் (நெ) க(ம)ப கோபி அவர்களின் அறிவுரையின் படி, தாளவாடி (நெ), க(ம)ப உட்கோட்டத்தின் சார்பாக 28.01.2025 நேற்று காலை 10.30 மணிக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. இப்பேரணியில் தாளவாடி பள்ளி மாணவ மாணவிகள் பதாகைகள் ஏந்தியபடி தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துவங்கி தாளவாடி பேருந்து நிலையம் வரை சென்று பேரணி முடிவுற்றது. இப்பேரணியில் தாளவாடி பகுதியினை சார்ந்த வட்டாட்சியர். வட்டார வளர்ச்சி அலுவலர், காவல் ஆய்வாளர். காவல் உதவி ஆய்வாளர், தாளவாடி நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்டப்பொறியாளர், இளநிலைப்பொறியாளர், சாலைப்பணியாளர்கள், அரசு துறை ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டார்கள். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பை வலியுறுத்தி துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. மாவட்ட நிருபர் SKT சுரேஷ்குமார்

Related Articles

Back to top button
Close
Close