fbpx
Others

நீடாமங்கலம்-மாணவர்கள் வளர்த்த மரக்கன்றுகள் பொதுமக்களிடம் வழங்கல்.


நீடாமங்கலம் நவ 26
பள்ளி மாணவர்களால் வளர்க்கப்பட்ட மரக்கன்றுகள் வளர்ந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் மரம் வளர்ப்பு ஆர்வலர்களிடம் வழங்கப்பட்டது.
நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் சென்ற மாதம் பதினோராம் தேதி நீடாமங்கலம் மற்றும் மன்னார்குடிபகுதிமாணவர்களுக்கு மரக்கன்றுகள் வளர்க்கும் பயிற்சி அளித்தும் விதைகள் இயற்கை உரங்கள் விதைகளை வழங்கி மரக்கன்றுகள் எவ்வாறு வளர்ப்பது என்று பயிற்சி அளித்தனர் . கடந்த 11ம் தேதி வளர்ந்த 500 மரக்கன்றுகளை மற்ற மாணவர்களிடம் வழங்கி மகிழ்ந்தனர். தற்போதுமேலும்500மரக்கன்றுகளை மாணவர்கள் தயார் செய்து பொதுமக்கள் மற்றும் மரக் கன்றுகள் வளர்க்கும் சமூக ஆர்வலர்களிடம் வழங்கினார் . மாணவர்கள் சிறப்புடன் வளர்த்து பாராட்டக்கூடியது.இது போன்று ஒவ்வொரு மாணவர்களும் மரம் வளர்த்தால் நமது மாநிலம் பசுமை பெற்ற மாநிலமாக வளரும் என்று நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தினர் தெரிவித்தனர். வரும் வாரத்தில் ஆயிரம் விதைகள் நடவு செய்து வரும் புத்தாண்டு அன்று அதை விதைப்பதாகவும் பல்நோக்கு சேவை இயக்க செயலாளர் ஜெகதீஸ் பாபு தெரிவித்தார்.

Related Articles

Back to top button
Close
Close