அரசு உயர்அதிகாரிகள் கவனத்திற்கு…
பழநி அடிவாரம் வடக்கு கிரி வீதியில் அமைந்துள்ள சண்முகசேவா மடத்திற்கு சொந்தமாக மூன்று கடைகள் உள்ளது.அதில் இரண்டு கடைகளை மாரிமுத்து என்பவர்
ரூ10,00,000 அட்வான்ஸ் மற்றும் மாதவாடகை ரூ20,000 கொடுத்து பேன்சி கடை நடத்தி வந்தார் என்றும். மாண்பமை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுகளால் மலைக்கோயில் அடிவாரம் கிரிவீதியில் உள்ள பல கடைகள் ஆக்கிரமிப்பு மூலம் அகற்றப்பட்டதால் கடைகளுக்கு தேவை அதிகமாக உள்ளதாகவும். மேலும் கார்த்திகை மாதம் தொடங்கி விட்டதால் சீசன் ஆரம்பித்துள்ளதால் மேற்படி கடைகளின் உரிமையாளரான சண்முகசேவா மடத்தின் மேனேஜர் ரமேஷ்பாபு என்பவர் கடைகளுக்கு மேலும் அட்வான்ஸ் ரூ10,00,000
மற்றும் வாடகை ரூ20,000 ம் அதிகப்படியாக கேட்டதாகவும், இல்லை என்றால் காலி செய்யவேண்டும் என்று அடியாட்கள் மூலம் மிரட்டியதாகவும், இதனால் கடை வாடகைதாரர் மாரிமுத்து பழநி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் OS 116/2024 – IA 1/2024 என்ற வழக்கு தாக்கல் செய்துள்ளார் என்றும், இந்நிலையில் மாரிமுத்து அவர் மனைவியோடு கோவை மருத்துவமனைக்கு சென்று இன்று காலை வந்து கடையை திறந்து பார்த்த பொழுது மடத்தின் மேனேஜர் ரமேஷ் பாபு மற்றும் அவரது அடியாட்கள் உதவியோடு நேற்று நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து அத்துமீறி உள்ளே புகுந்து ரூ10,00,000 மதிப்புள்ள பேன்சி பொருட்களை திருடிச் சென்று விட்டதாகவும், மேலும் காவல்துறையும் பாதிக்கப்பட்ட மாரிமுத்து மற்றும் அவரது மனைவி மற்றும் குழந்தைகளையும் மிரட்டுவதாகவும் கூறுகின்றனர்… இதனால் மாண்பமை பழநி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு நிலுவையில் உள்ளதை பொருட்படுத்தாத மேற்படி மடத்தின் மேனேஜர் மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறையினரை கண்டித்து மேற்படி வாடகைதாரரும், அவரது மனைவியும் கடையின் உள்ளே அமர்ந்து தங்களுக்கு நீதி வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.