கம்பம்-அரசு நேரடி நெல் கொள்முதல் மையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை.

தேனி : அக்டோபர் 21: தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தற்பொது முதல் போக நெல் அறுவடை பணிகள் மும்பரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் குச்சனூர், மார்க்கயன்கேட்டை, கூடலூர் சுருளிப்பட்டி, கேம் பட்டி, காமயகவுண்டன் வட்டி ஆகிய பகுதிகளில் பயிரிடப்பட்ட நெற்கதிர்கள் தற்போது இயந்திரங்கள் மூலம் தீவிரமாக அறுவடை செய்யப்பட்டு வருகின்றன இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சின்னமனூர் , கம்பம், உத்தமபாளையம, கூடலூர் ஆகிய பகுதிகளில் சுமார் 14,000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்கதிர்கள் அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகளின் நலன் கருதி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனே திறக்க வேண்டும் என தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் நெல் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறப்பு நிருபர்தேசநேசன்
ஜெய ஹரிஹரன்