fbpx
Others

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிறப்புசெய்தி..

11.9.24.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புது தேவங்குடி மேலாளவந்சேரி 24. வது கிளைமாநாடு ஏ. செல்லையின் தலைமையில் நடைபெற்றது மாநாட்டு கொடியின் எம்.வேலு ஏற்றினார் மாநாட்டு துவக்க உரை கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி பேசினார் மாநாட்டை வாழ்த்தி ஒன்றிய செயலாளர் டி.ஜான் கென்னடி ஒன்றிய குழு உறுப்பினர் எஸ். செல்வமணி பேசினார்கள் நிறைவாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி . கந்தசாமி நிறைவுறையாற்றினார் புதுசெயலாளர்களாக மேலாள வந்த சரி பி. ராஜேந்திரன் புது தேவங்குடி கே. கோபாலகிருஷ்ணனன் தேர்வு செய்யப்பட்டார்கள். தீர்மானங்கள்.1. புது தேவங்குடி மேலாள வந்தசேரி ஊராட்சிகளில் அனைத்து பாசன வாய்க்கால்களை தூர்வார்பட வேண்டும் 2. தேவங்குடியில் நிலவும் குடிநீர் பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்3. அனைவருக்கும் 100 நாள் வேலை கொடுக்க வேண்டும் சுழற்சி முறை அனுமதிக்க கூடாது 4. சுய உதவிக் குழுகளுக்கு கூட்டுறவு வங்கிகளின் மூலம் கடன் வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் 5. தேவங்குடி கால்நடை மருத்துவமனையில் நிரந்தர மருத்துவர் போட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close