கருவூலத்துறை ஆணையாளர் அதிகார மிரட்டல்–கண்டன ஆர்ப்பாட்டம்…
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் நீலகிரி மாவட்டம்
களஞ்சியம் செயலியில் அரசு ஊழியர் தனிப்பட்ட முறையில் விடுப்புகள், GPF
விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அரசு விதிகளுக்கு முரணாக கருவூலத் துறை ஆணையாளர் அதிகார மிரட்டல். ஊதியம் வழங்கும் அலுவலர்களைஅதிகாரமற்றவர்களாக மாற்ற முயற்சி.அலுவலகத்தில் உள்ள நிர்வாகப் பணியிடங்களை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதற்கு தான்..! அலுவலகத் தலைவர் அலுவலகம் மூலம் அரசு ஊழியர்களின் விடுப்பு விண்ணப்பம், GPF விண்ணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கவில்லை.அரசு ஊழியர் அனைவருக்கும் அரசு செலவில் கைபேசி, சிம்கார்ட், இணைய தள சேவைக்குரிய பணம் வழங்காமல்.,களஞ்சியம் செயலியில் விடுப்பு மற்றும் GPF விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று மிரட்டும் சர்வதிகார நடவடிக்கையைக் கண்டித்து… கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்:27.8.2024 செவ்வாய்கிழமைநேரம்:மதிய உணவு இடைவேளை மற்றும் மாலை
இடம்: அனைத்து அலுவலகங்கள் முன்புநிர்வாகப் பணியிடங்களை பாதுகாத்திட..
களஞ்சியம் செயலியை பதிவிறக்கம் செய்யாதீர்.களஞ்சியம் செயலியை பதிவிறக்கம் செய்தவர்கள் uninstall செய்யுங்கள்.அலுவலகத்திற்கு அளித்த சிம் எண்ணை
பட்டன் கைபேசிக்கு மாற்றுவோம்.நீங்கள் பணிபுரியும் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்யுங்கள்.. .அநீதியை முறியடிக்கஆர்ப்பரித்து வாரீர்.
சுப்பிரமணி—மாவட்ட தலைவர் மாவட்ட செயலாளர்–பாலச்சந்தர்