fbpx
Others

கோவை–போத்தனூர் சத்திய சாய் சமிதியில் “ஹிருதய சங்கமம்” நிகழ்ச்சி..

கோவை மாவட்டம் போத்தனூர் சத்திய சாய் சமிதியில் “ஹிருதய சங்கமம்” நிகழ்ச்சி 15.08.2024 அன்று நடைபெற்றது.புட்டபர்த்தி மற்றும் பெங்களூரில் அமைந்துள்ள சத்திய சாய் அதிநவின மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்ட பயனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் – நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி சென்ற 2016ம் ஆண்டு முதல் துவங்கி ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ம் தேதி மாவட்ட நிகழ்ச்சியாக இது நடைபெற்று வருகிறது.நிகழ்ச்சியின் தொடக்கமாக பிரசாந்தி கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேத பாராயணமும், சாய் பஜனையும் நடைபெற்றது.கோவை மாவட்டத் தலைவர் திரு T.S. வெங்கடேச நாராயணன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். அவரது உரையினை தொடர்ந்து மருத்துவர் R. ரமணி அவர்கள் மருத்துவ அறிவுரைகள் வழங்கினார். அவரைத் தொடர்ந்து தமிழ்நாடு மாநில (தெற்கு) மருத்துவ பொறுப்பாளர் மருத்துவர் P. கிருஷ்ணமூர்தி அவர்கள் விழா சிறப்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மாநில ( வடக்கு) எஸ்.ஆர்.பி. மற்றும் மருத்துவ நிகழ்வுகள் பொறுப்பாளர் திரு ஜி.வி.மூர்த்தி அவர்களும் மற்றும் தமிழ்நாடு மாநில (தெற்கு) பொறுப்பாளர் திரு முரளி கிருஷ்ணன் சாயி ராம். அவர்களும் மருத்துவ முகாமின் சிறப்புகளையும், மருத்துவப் பணியின் சிறப்புகளையும் எடுத்துரைத்தார்கள்.மருத்துவர் திரு.ரவிக்குமார் அவர்கள் பயனாளிகளுக்கு சிறந்த மருத்துவ ஆலோசனைகள் மற்றும் உணவு பழக்க வழக்கங்கள் பற்றி தெளிவாக எடுத்துரைத்தார்கள்.இந்நிகழ்ச்சியில் தலைமை மருத்துவர்கள் ரமணி, கணேசன், கோவிந்தராஜு, கனகராணி, பார்வதி, ஆகியோர் கலந்துகொண்டனர் மருத்துவரின் பரிந்துரைப்படி தேவையான பயனாளிகளுக்கு இரத்தம், சர்கரை அளவு மற்றும் கண் சிகிச்சை போன்றவைகள் “ஸ்ரீ சத்ய சாயி நடமாடும் மருத்துவமனை” மூலம் எடுக்கப்பட்டது.இந்த சிறப்பு மருத்துவ முகாமில் 98 நபர்கள் (ஆண்கள் 50 & பெண்கள் 48 பேர்கள்) பயன் பெற்றனர். வந்த பயனாளிகளுக்கு பிரசாதமாக சனாதனசாரதிபுத்தகமும்,மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.இறுதியாக மாவட்ட எஸ்.ஆர்.பி. பொறுப்பாளர் திரு S. சந்திரசேகர் அவர்களின் நன்றியுரைக்கு பின்பு மங்கள ஆரத்தியுடன் நிகழ்ச்சி சிறப்பாக நிறைவு பெற்றது.
பயனாளிகள் அனைவருக்கும் மதிய உணவு மற்றும் 30 நாட்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளும் கொடுக்கப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close