fbpx
Others

மதுரை மாவட்ட ஆட்சியர் உடன் கவனத்திற்க்கு..?

தமிழ்நாடு – மதுரை மாவட்டம், மதுரையில் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை !!! ஆனால் அடாவடியாக சுங்க வரி வசூல்??? மதுரை சுங்கச்சாவடி விவகாரத்தில் பழைய நடைமுறைபடி உள்ளூர் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் இல்லை. சுங்கச்சாவடியை சுற்றியுள்ள 7 கி.மீ. தூர சுற்றுவட்டார பகுதி மக்கள், ஆதார் அட்டை கொண்டு வந்தால் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படாது. 2020ம் ஆண்டைப் போலவே உள்ளூர் மக்கள் சுங்கக் கட்டணம் இல்லாமல் சுங்கச்சாவடியில் செல்லலாம். உள்ளூர் மக்களுக்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் இடையூறு செய்யக்கூடாது.மதுரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி உள்ளது. ஏற்கனவே விதிக்கப்பட்ட அபராத தொகையை ரத்து செய்யுமாறு தேசிய நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை வைத்துள்ளோம். உள்ளூர் முகவரி உள்ள மக்களுக்கு கட்டண விலக்கு தொடரும்.இவ்வாறுஅவர்கூறினார்.இந்த அறிவிப்பு செய்தி வந்த பிறகு கூட சுங்கத்தினர் அடாவடியாக சுங்க வரி வசூல் வாக்கு வாதங்கள் செய்து கண்டிப்பாக வசூல் செய்கின்றனர். அப்போது இந்தஅறிவுப்புகளுக்கு என்ன அர்த்தம்! இவற்றின் மீது உடனடியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்!!!.... ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close