ஆற்காட்டில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த பத்திரிகையாளர் சங்கம் பேரவை கூட்டம் …
ஜூன்-20இராணிப்பேட்டை மாவட்ட தமிழ்நாடு ஒருங்கிணைந்த பத்திரிகையாளர் சங்கம் பேரவை கூட்டம் ஆற்காட்டில் நடைபெற்றது.இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையம் அருகில் தனியார் ஹோட்டலில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த பத்திரிகையாளர் சங்க ராணிப்பேட்டை மாவட்ட பேரவை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட பொறுப்பு தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் சத்திய நாராயணன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் மணிவண்ணன் வரவேற்புரை ஆற்றினார். அதைத் தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இராணிப்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு, ஆற்காடு நகர மன்ற துணைத் தலைவர் டாக்டர் எஸ்.பவளக்கொடி சரவணன், ஆற்காடு தலைமை மருத்துவர் சிவசங்கரி, வாலாஜா குழந்தைகள் நல மருத்துவர் கோபாலகிருஷ்ணன், சமூக சேவர்கள் பென்ஸ் பாண்டியன், பல்த்தசார்,அலிம்அஹமத் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். இதில் சங்க மாநில நிர்வாகிகள் நிறுவன ஜி.கே. ஸ்டாலின்,மாநில தலைவர் பொறுப்பு கிறிஸ்டோபர்,தமிழ்நாடு ஓய்வூதிய பத்திரிகையாளர் சங்க தலைவர் பி. ஆர்.சுப்பிரமணியன், மாநில பொருளாளர் இந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு நிகழ்வாக சாதனையாளர்களுக்கு சமூக சேவகர் களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதற்கு முன்னதாக இராணிப்பேட்டை மாவட்ட தலைவராக மணிவண்ணன் செயலாளராக உலகநாதன், பொருளாளராக மு.மதன், துணைத் தலைவராக ஆனந்தன், செயலாளராக ரஞ்சித் குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இதில் இறுதியாக மு.மதன் அனைவருக்கும் நன்றி கூறினார்.