fbpx
Others

கள்ளக்குறிச்சியில் நடந்தது என்ன ?

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 3 பேர் பலியாகினர். தொடர்ந்து தற்போது பலி உயர்ந்து வரும் நிலையில் உயிரிழப்பு 18 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கைஅதிகரிக்கலாம்என்று அஞ்சப்படுகிறது. கள்ளக்குறிச்சி நகர்ப்பகுதியைச் சேர்ந்த கருணாபுரம் பகுதியில்tn-fishermen-arrest-cm-mk-stalin-letter-to-central-govt கண்ணுக்குட்டி என்ற பட்டப்பெயர் கொண்ட நபர் ஒருவர் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். பல முறை சிறை சென்றுள்ள இவர் மீண்டும் மீண்டும் கள்ளச்சாராய விற்பனையை தொடர்ந்து வந்துள்ளார். அரசு மதுபானக் கடையான டாஸ்மாக்கில் மதுபானங்கள் விலை அதிகம் என்பதால், கருணாபுரம் பகுதியை ஒட்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் கள்ளச்சாராயத்தை நாடி வந்துள்ளனர். 18யை தொட்ட கள்ளச்சாராய பலி.. குற்றம் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதிஇந்நிலையில்,அப்பகுதியில்சட்டவிரோதமாகவிற்கப்பட்டகள்ளச்சாராயத்தை குடித்து பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான தலைவலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில் 80 பேர்அரசுமற்றும்தனியார்மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் கள்ளச்சாராயம் குடித்த சுரேஷ், பிரவீன், சேகர், மகேஷ், ஜெகதீஷ் ஆகிய 5 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயரும் கள்ளச்சாராய பலி.. கள்ளக்குறிச்சியில் என்ன நடந்தது? வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி அரசு விளக்கம்Kallakurichi Illicit liquor Crime இதற்கிடையே தான் 14 பேர் உயர் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இத்தகைய சூழலில் தான் ஜிப்மர் மருத்துவுமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் பலியாகினர். அதன்பிறகும் தொடர்ந்து உயிர் பலி என்பது அதிகரித்து வருகிறது. தற்போது மேலும் 10 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மொத்த பலி என்பது 18 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மருத்துவமனையில் புதிய நபர்கள் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 80 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் அதில் 10 பேரின் நிலைமை மோசமாக உள்ளது. இதனால் இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. கள்ளக்குறிச்சி அருகே நிகழ்ந்துள்ள கள்ளச்சாராய சாவு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சாராயம் குடித்தவர்கள் உயிரிழந்தது எப்படி என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சாராயம் விற்பனை செய்தவரை தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் தான் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் எஸ்பி சமய்சிங் மீனா, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக சஸ்பெண்ட்kallakurichi collector sp illicit liquor செய்யப்பட்டுள்ளார். . கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக எம்எஸ் பிரசாந்த் நியமனம்..புதிய எஸ்பியாக ரஜத் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி மதுவிலக்கு அமலாக்க பிரிவை சேர்ந்த காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ் செல்வன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் பாண்டிச்செல்வி, உதவி காவல் ஆய்வாளர் பராதி மற்றும் அப்பகுதி காவல் நிலை ஆய்வாளர் ஆனந்தன், உதவி காவல் ஆய்வாளர் ஷிவ்சந்திரன், காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் உள்ளிட்டவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close