fbpx
Others

மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி அவசரஆலோசனை

உக்ரைன் மீது ரஷியா படை

உக்ரைன் மீது ரஷியா நேற்று முன்தினம் படையெடுத்தது. இது சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த படையெடுப்பை தொடர்ந்து பாதுகாப்புக்கான மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி நேற்று முன்தினம் அவசர ஆலோசனை நடத்தினார். இதில் உக்ரைன் மீதான போரை தொடர்ந்து பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம், அதை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் பாதுகாப்புக்கான மத்திய மந்திரிகள் குழுவுடன் பிரதமர் மோடி இன்று(சனிக்கிழமை) மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகள் முடுக்கி விட்டுள்ள நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது..

Related Articles

Back to top button
Close
Close