Others

த.வெ.க., – எம்.எல்.ஏ., அருள்விக்னேஷ், 36; பதவியில் இருந்து ராஜினாமாவா….?

தவெக எம்.எல்.ஏ.வின் ஆபாச மெசேஜ் விவகாரம்... நீதிபதி விக்டோரியா கௌரி சரமாரி  கேள்வி!கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு வாட்ஸாப்பில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில், த.வெ.க., – எம்.எல்.ஏ., அருள்விக்னேஷ் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையை நடத்தவும், கண்காணிக்கவும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.கள்ளக்குறிச்சி (தனி) தொகுதி த.வெ.க., – எம்.எல்.ஏ., அருள்விக்னேஷ், 36; இவர், சில மாதங்களுக்கு முன், மாவட்ட பெண் கலெக்டரின் வாட்ஸாப் எண்ணுக்கு தவறான கண்ணோட்டத்தில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த கலெக்டர், தன் கணவரிடம் விபரம் தெரிவித்தார். அத்துடன், இப்பிரச்னை மாநில அரசின் தலைமைச் செயலர் மற்றும் த.வெ.க., அரசில் முக்கிய பொறுப்பில் உள்ள அமைச்சர் ஒருவரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, அந்த அமைச்சர், எம்.எல்.ஏ., அருள்விக்னேஷை கண்டித்துள்ளார்இந்நிலையில், சில தினங்களுக்கு முன், ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் கசிந்து, ஊடகங்களில் வெளியானது. அதனால், அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களும் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர். ஆனால், அருள்விக்னேஷ்எம்.எல்.ஏ., இது பொய்யான தகவல்; தவறான கண்ணோட்டத்தில் மெசேஜ் அனுப்பவில்லை. தி.மு.க., – ஐ.டி.,விங் மூலமாக பொய் தகவல் பரப்பட்டு வருவதாக கூறியிருந்தார்.அதேநேரத்தில், சம்பவம் தொடர்பாக கலெக்டரும், வெளிப்படையாக எதுவும் தெரிவிக்காமல் மவுனம் காத்தனர். இதற்கிடையில், இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரிக்கதவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது கலெக்டர் பத்மஜா எஸ்பியிடம் புகார்! | Tvk  MLA Arul Vignesh - kallakuruchi collector padmaja - fnewsnow.com காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி அ.தி.மு.க., சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அத்துடன், இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையமும் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது.கலெக்டரின் புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஏழு நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என, தமிழக டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வாலுக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் மகளிர் ஆணையம் அளித்த அவகாசம் கடந்த, 22ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், அ.தி.மு.க., நிர்வாகி தாக்கல் செய்த மனுமீதானவிசாரணைசென்னைஉயர்நீதிமன்றத்தில்நேற்றுமுன்தினம்துவங்கியது.அப்போது, ஆபாச குறுஞ்செய்தி விவகாரத்தில் கலெக்டரிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை என, தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக காவல் துறை அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை கள்ளக்குறிச்சி எஸ்.பி., ஷஹ்னாஸ், கலெக்டரின் வீட்டிற்கு நேரடியாக சென்றும்பவம் தொடர்பாக பேசியுள்ளார். அதன்பின், நடந்த சம்பவம் தொடர்பாக, கலெக்டர் புகார் அளித்ததையடுத்து, கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அருள்விக்னேஷ் எம்.எல்.ஏ., மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதற்கிடையில், இச்சம்பவம் தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று காலை தொடங்கியது. அப்போது, கலெக்டர் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், கள்ளக்குறிச்சி எஸ்.பி., ஷஹ்னாஸ் வழக்கை விசாரிப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, ‘வேறு எஸ்.பி.,யை கொண்டு இவ்வழக்கை விசாரிக்க வேண்டும், இவ்வழக்கில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம். வழக்கின் விசாரணை அறிக்கையை டிசம்பர், 22ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்.விசாரணையின் முன்னேற்றம் குறித்து வரும், 27ம் தேதி தெரிவிக்க வேண்டும்’ என, நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அருள்விக்னேஷ் எம்.எல்.ஏ., மீதான புகாரை விசாரிக்கும் அதிகாரியாக திருப்பூர் மாவட்ட எஸ்.பி., ஸ்ருஷ்டிசிங்கும், விசாரணையை கண்காணிக்கும் அதிகாரியாக நிர்வாக பிரிவு ஐ.ஜி., காமினியும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது எம்எல்ஏ தண்டிக்கப்படவே வாய்ப்புகள் அதிகம். அப்படி தண்டிக்கப்பட்டால் அவரது பதவி பறி போய்விடும். ஆறு ஆண்டுக்கு தேர்தலில் நிற்கவும் முடியாது. இத்தகைய சிக்கலை ஏற்படுத்திய அருள் விக்னேஷை பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வைப்பதற்கு கட்சி தலைமை தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Articles

Back to top button
Close
Close