கொளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானார்–வயது 75

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானார் என எம்.ஜி.எம்மருத்துவமனைநிர்வாகம்அறிவித்துள்ளது. அவருக்கு வயது 75.நீண்டகால சுவாச பாதிப்பு காரணமாக கடந்தசெப்டம்பர்9ம்தேதிமுதல்தீவிரசிகிச்சைப்பிரிவில்வி.எஸ்.பாபுசிகிச்சைபெற்றுவந்ததாகமருத்துவமனையின் இயக்குநர்தெரிவித்துள்ளார்.மருத்துவர்கள் பல்வேறு சிகிச்சைகளை அளித்தும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததாகவும் இந்நிலையில், இன்று (நவம்பர் 19) பிற்பகல் 2.24 மணிக்கு அவர் உயிரிழந்தார் எனவும் மருத்துவமனை கூறியுள்ளது.தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் த.வெ.க வேட்பாளராக வி.எஸ்.பாபு போட்டியிட்டார். தேர்தலில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.ன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தோற்கடித்ததால் வி.எஸ்.பாபு அதிக கவனம் பெற்றார். அவரது தேர்தல் வெற்றியை எதிர்த்து கடந்த ஆகஸ்ட் மாதம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்று வந்த வி.எஸ்.பாபுவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மூச்சுத் திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார்.அவரது உடல்நலம் குறித்து தொடக்கத்தில் மருத்துவ அறிக்கைகள் வெளியாகி வந்தன. ஆனால், அதன்பிறகு அவரது உடல்நலம் குறித்த எந்தத் தகவலும் வெளிவரவில்லை.நவம்பர் 18 ஆம் தேதி கொளத்தூர் தொகுதியை சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்அந்த மனுவில், ‘கொளத்தூர் தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதியன்று அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து அலுவல்ரீதியாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை’ எனக் கூறியிருந்தார்.’அவரது தனிப்பட்ட அந்தரங்க உரிமை, கண்ணியம், தனிநபர் ரகசியம் தொடர்பான மருத்துவ விவரங்களை வெளியிடும்படி கோரவில்லை. ஆனால், தொகுதி எம்.எல்.ஏ என்ற முறையில் அவரது உடல்நிலை குறித்து தகவல்களைத் தெரிந்து கொள்ள அனைவருக்கும் உரிமை உள்ளது’ எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.’மருத்துவ சிகிச்சையில் உள்ள வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து சட்டப்படி அனுமதிக்கப்பட்ட தகவல்களை வெளியிடுமாறு நவம்பர் 5 மற்றும் நவம்பர் 12 ஆகிய தேதிகளில் அரசுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ என வழக்கின் மனுவில் தேவராஜன் தெரிவித்திருந்தார்.இந்த மனு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், வி.எஸ்.பாபு உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் விஎஸ் பாபு அனுமதிக்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். நாங்கள் எந்த அளவுக்கு சிகிச்சை அளிக்க முடியுமோ,அந்தளவுக்குசிகிச்சைஅளித்தோம்.ஒருங்கிணைந்த மருத்துவக்குழு மூலம் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தோம். அரசு மருத்துவமனை தரப்பில் இருந்து ஒரு குழுவை அனுப்பி வைத்து சிகிச்சை முறைகளை மேற்பார்வையிட வேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டார்.அதன் அடிப்படையில் அரசு மருத்துவமனை தரப்பின் மருத்துவக் குழுவும் கண்காணித்து வந்தது. சிகிச்சை முறைகளை மருத்துவர்கள் என்னிடம் கூறி வந்தனர். தினசரி விஎஸ் பாபுவின் உடல்நிலை குறித்து முதல்வர் கேட்பார், நானும் அவரிடம் சொல்லி வந்தேன்.குணம் அடைந்து விரைவில் வீடு திரும்புவார் என்று நாங்கள் நம்பி இருந்தோம். அவருக்கான சிகிச்சையில் முன்னேற்றமும் இருந்தது. இரண்டு, மூன்று முறை அவர் வீடு திரும்பும் சூழலும் ஏற்பட்டது. ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த முன்னேற்றத்தை தக்க வைக்க முடியவில்லை. இவ்வாறு அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.