Others

உயர்நிலை குழு, த.வெ.க., அரசு கலைப்ப்பு — தி.மு.க.,மற்றும்கம்யூனிஸ்ட்கண்டனம்- விவரம்..

மின் தேவையை பூர்த்தி செய்வதற்காகவே மின்சாரம் கொள்முதல்: அமைச்சர்  நிர்மல்குமார் | Electricity procured solely to meet power demand: Minister  Nirmal kumarதமிழகத்தில், கடந்த தி.மு.க., ஆட்சியில், மத்திய, மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு பரிந்துரை அளிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவை முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க, அரசு கலைத்துள்ளது.இதற்கு,  தலைவர்கள்கண்டனம்தெரிவித்துள்ளனர். அதன் விபரம்:: தமிழகத்தின் உரிமைகளை காக்கவும், இந்தியாவில் உள்ள மாநிலங்களின் உரிமை போராட்டத்திற்கு வழிகாட்டும் வகையிலும், தி.மு.க., ஆட்சியில் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட, மத்திய, மாநில அரசுகளின் உறவுகள் குறித்த உயர்நிலை குழுவை, த.வெ.க., அரசு கலைத்திருப்பது கண்டனத்திற்குரியது.ஏற்கனவே இந்தக் குழு, மத்திய மாநில உறவுகள் குறித்த தங்களின் ஆய்வறிக்கை முதல் பாகத்தை சமர்ப்பித்துள்ளது. இந்நிலையில், குழுவின் பணி முழுமையாக நிறைவடைவதற்கு முன்பே, கலைப்பதற்கான அவசியம் என்ன? மாநில சுயாட்சி கொள்கையின் மீதான வெறுப்பா அல்லது டில்லி தலைமையின் உத்தரவா?மாநில தன்னாட்சி உரிமையை பாதுகாப்போம் என, வசனம் பேசிக்கொண்டே, மாநில சுயாட்சிக்கு குழி பறித்திருக்கிறது த.வெ.க., அரசு. இந்தியாவில் கூட்டாட்சி அரசியலை வலுப்படுத்துவதற்கான, தமிழகத்தின் முன்னெடுப்பை, த.வெ.க., அரசு பின்னுக்கு தள்ளி விட்டது.முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில், நிர்வாகம், சட்டம் மற்றும் பொருளாதார வல்லுனர்கள் இடம் பெற்றிருந்த குழுவை கலைத்திருப்பதன் வழியே, இந்த, ‘டம்மி’ முதல்வர், தமிழகத்திற்கு துரோகம் இழைத்துள்ளார். தமிழக சட்டஆணையத்தின் பணிகளை காரணம் காட்டி, குழுவை ரத்து செய்திருக்கும் இவர்கள், மாநில உரிமைகளை பாதுகாக்க, வேறென்ன திட்டம் வைத்திருக்கின்றனர்.மத்திய, மாநில உறவுகள் குறித்த உயர்நிலை குழு கலைக்கப்பட்டது, சரியான நடவடிக்கையல்ல. மத்திய அரசு, மாநில அரசுக்கு எதிராக நடத்தி வரும் அத்துமீறல்களை, தமிழக அரசும், மக்களும், கடந்த சிலLatest Tamil News ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றனர் இந்நிலையில், மத்திய, மாநில உறவுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். அதை கவனத்தில் கொள்ளாமல், நீதிபதி குரியன் ஜோசப்தலைமையிலானகுழுகலைக்கப்பட்டதை,மறுபரிசீலனைசெய்யவேண்டும்.இவ்வாறுதி.மு.க.,மற்றும்கம்யூனிஸ்ட்தெரிவித்துள்ளனர்   கலைக்கப்பட்டது ஏன்?:அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்  வெளியிட்டுள்ள அறிக்கை: கோவை ஈ.வெ.ரா., நுாலக ஊழல் விவகாரத்தில் இருந்து திசை திருப்ப, ஏதேனும் ஒரு விஷயத்தை, ஸ்டாலின் தேடிக் கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன். ‘பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்’ சார்.மத்திய, மாநில உறவுகளை நிர்வகிப்பதற்காக, முந்தைய அரசால் அமைக்கப்பட்ட குழுவில், மூன்று உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர். அதில் ஒருவர், கடந்த மே, 4ம் தேதி ராஜினாமா செய்து விட்டார்.முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின், புதிய சட்ட ஆணையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு, அது தொடர்பாக நிபுணர்களின் கருத்துக்களை கேட்டறிந்ததுடன், மத்திய, மாநில உறவுகள் தொடர்பானபணிகளை, மேலும் திறம்பட செயல்படுத்தும் நோக்கில், கடந்த ஆகஸ்ட், 7ம் தேதி புதிய சட்ட ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆணையமே மத்திய, மாநில உறவுகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை அளிக்கும். இந்த விபரம் புதிய சட்ட ஆணையம் தொடர்பான அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.   பா.ஜ., வரவேற்புமத்திய-, மாநில உறவுகளை ஆய்வு செய்யவும், தேவையான சீர்திருத்தங்களை பரிந்துரைக்கவும், மாநில சட்ட ஆணையம் உட்பட ஏற்கனவே பல்வேறு அரசியல் சட்ட கட்டமைப்புகள் உள்ளன. ஆனாலும் தேவையின்றி, ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைத்ததால், நிதி விரயம் தான் ஏற்பட்டது. இந்திய ஜனநாயகம்,நிலைத்தன்மை கொண்ட விதிகளையும், அரசியலமைப்பு தத்துவங்களையும், சட்ட கட்டமைப்புகளையும் கொண்டுள்ளது. இந்நிலையில், குரியன் ஜோசப் குழுவை கலைத்துள்ள த.வெ.க., அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது.   -நாராயணன் திருப்பதி,தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர்.

Related Articles

Back to top button
Close
Close