Others

ஜனாதிபதி திரவுபதி முர்மு தி.மு.க., – எம்.பி.,க்ளை சந்திப்பதை தவிர்கிறாரா..?

திரௌபதி முர்மு - விக்கிபீடியா

பழையஓட்டுச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தக்கோரி, ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து மனு அளிக்க, தி.மு.க., – எம்.பி.,க்கள் நேரம் கேட்டுள்ளனர். அதற்கு ஜனாதிபதி அலுவலகத்தில் இதுவரை அனுமதி தரப்படவில்லை என, தெரிகிறது.தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில், நேற்று முன்தினம் அறிவாலயத்தில், அக்கட்சியின் எம்.பி.,க்கள் கூட்டம் நடந்தது. அதில், ‘வாக்காளர் பட்டியலில் உண்மையான வாக்காளர்களின் பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளன. எனவே, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டு எடுக்க வேண்டும். அதற்காக, பழைய ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தல்களை நடத்த வேண்டும்’ என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த தீர்மானங்களை, எம்.பி.,க்கள் அனைவரும் ஒன்றாக சென்று, டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்துLatest Tamil News கொடுக்கும்படி ஸ்டாலின் அறிவுறுத்தினார். அதன்படி, மூத்த எம்.பி., ஒருவர், டில்லியில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தை தொடர்பு கொண்டு, ஜனாதிபதியை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். ஆனால், அதற்கு எந்த பதிலும் ஜனாதிபதி மாளிகை தரப்பில் இருந்து வரவில்லை.ஆயுதபூஜை விடுமுறை என்பதால்,எம்.பி.,க்கள்சந்திப்பைஜனாதிபதிதவிர்த்திருக்கலாம். மருத்துவ படிப்புககான, ‘நீட்’ தேர்வு எதிர்ப்பு தொடர்பாக, தி.மு.க., சார்பில், 85 லட்சம் கையெழுத்து படிவங்களை, ஜனாதிபதிஅலுவலகத்தில்வழங்கினோம்;அதன்மீதும்எந்தநடவடிக்கையும்எடுக்கவில்லை.வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி விவகாரங்கள், ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்காக நிலுவையில் உள்ளதால், எம்.பி.,க்களை சந்திப்பதை, ஜனாதிபதி விரும்பாமல் இருக்கலாம். இருப்பினும், சட்டரீதியானபோராட்டத்தை தொடருவோம். எங்கள் மனுக்கள் மீது ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதுவரை நாங்கள் போராடுவோம். இவ்வாறு தி.மு.க.எம்.பி.,க்கள்  கூறினர்.

Related Articles

Back to top button
Close
Close