Others

போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்பு உணர்வு பேரணி…

செங்குன்றம்-நல்லூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் பங்கேற்றபோதைப் பொருள் எதிர்ப்பு விழிப்பு உணர்வு பேரணி நடந்தது!சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு விழிப்பு உணர்வு தினத்தை முன்னிட்டு ஆவடி காவல் ஆணையரகம் செங்குன்றம் காவல் மாவட்டத்திற்குட்பட்ட சோழவரம் காவல் நிலையம், செங்குன்றம்-நல்லூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட் சிட்டி மருத்துவமனை மற்றும் ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் இணைந்து போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்பு உணர்வு பேரணி நடத்தியது.மருத்துவமனை வளாகத்தில் பல்கலைக்கழகத் தலைவர் டாக்டர் சபீதா தலைமை தாங்கினார்.ஸ்ரீவெங்கடேஸ்வரா மருத்துவமனை துணைத்தலைவர் சக்தி, மருத்துவகண்காணிப்பாளர்டாக்டர்வெங்கடேஸ்வரன்ஆகியோர்முன்னிலைவகித்தனர்.ஆவடி காவல் ஆணையரக இணை ஆணையாளர் முனைவர் ஆர். சிவகுமார், செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையர் கே.மகேஸ்வரி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்பு உணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.இந்நிகழ்வில் செங்குன்றம் காவல் சரக உதவி ஆணையர் பிராங் டி ரூபன், சோழவரம்காவல்நிலையஆய்வாளர்கிளாஸ்டின்டேவிட்,உதவிஆய்வாளர்கள்சுகுமாரி,தம்பி  துரைஉள்ளிட்ட500க்கும்மேற்பட்டமாணவமாணவிகள்கலந்துகொண்டனர்.இப்பேரணியில் மாணவ- மாணவிகள் போதை விழிப்பு உணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவண்ணம் மருத்துவமனை வளாகத்திலிருந்து புறப்பட்டு சோழவரம் சுங்கச்சாவடி வரை சென்று பொதுமக்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்தினர்.

Related Articles

Back to top button
Close
Close