Others

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் ரெய்டு….?

கே.என்.நேரு வீட்டில் அதிரடி ரெய்டு; காலையிலேயே திமுகவுக்கு ஷாக் கொடுத்த  லஞ்ச ஒழிப்புத்துறை!இன்று (அக்.29) காலை முதல் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.3 பொலிரோ வாகனங்களில் வந்த 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்தச் சோதனையைத் தொடங்கினர்.சோதனை நடக்கும் சமயத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது குடும்பத்தினர்வீட்டிற்குள்ளேயேஇருப்பதுஉறுதிசெய்யப்பட்டுள்ளது.இதனையொட்டி, அவரது வீட்டு வாசலில் திமுகவினர் திரண்டு காத்திருக்கின்றனர்.அங்கு மட்டுமல்லாது சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள நேருசகோதரர்ரவிச்சந்திரன்வீடு,அலுவலகத்திலும்சோதனைநடத்திவருகின்றனர்.முன்னதாக, கடந்த செப்.5-ம் தேதி நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. அப்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தது. அதனால், பேரவை நடக்கும்போது எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உள்ளகே.என்.நேருதொடர்புடைய இடங்களில்அதிரடிசோதனைநடத்தப்படுவதுதமிழகஅரசியலில்பரபரப்பைஉருவாக்கியது.இந்நிலையில் இன்று மீண்டும் சோதனை நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.வரும் நவ.16 ஆம் தேதி நேருவின் தம்பி ரவிச்சந்திரன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில், இந்த சோதனை அரசியல் வட்டாரத்தையும் தாண்டி அவரது குடும்பத்தினர் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.முன்னதாக, தனியார் பள்​ளி​களுக்கு அங்​கீகாரம் பெற்​றுத் தரு​வதாகக் கூறி ரூ.400 கோடி வரை மோசடி செய்​யப்​பட்ட வழக்​கில் திமுக முன்​னாள் அமைச்​சர் அன்​பில் மகேஸ் நேற்று கைது செய்யப்பட்டார். இன்று மற்றொரு திமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் ரெய்டு நடைபெறுகிறது.

Related Articles

Back to top button
Close
Close