Others

6 மாவட்டங்களில் ஆரஞ்சு அலெர்ட்’….

Latest Tamil Newsசென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் வி.ஆர்.துரை அளித்த பேட்டி: தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியின் தாக்கம் காரணமாக, தென் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அக்., 26ம் தேதி வரை கனமழை நீடிக்க வாய்ப்புள்ளது.துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில், இன்று இடி, மின்னலுடன் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான, ‘ஆரஞ்ச் அலெர்ட்’ அறிவிக்கப்பட்டு உள்ளது.திருச்சி, ஈரோடு, அரியலுார், பெரம்பலுார், கடலுார், நாமக்கல், விழுப்புரம், திருப்பூர், கரூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் மேகமூட்டமாக இருக்கும்; ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.நேற்று காலை வரையிலான,24மணிநேரத்தில்அதிகபட்சமாக,கன்னியாகுமரிமாவட்டம்அடையாமடைபகுதியில்,18செ.மீ.,மழைபெய்துள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் சித்திரங்கோடு, 16; கோவை மாவட்டம் பொள்ளாச்சி, மக்கினம்பட்டி, தேனி மாவட்டம் பெரியகுளம் தலா, 15; கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனை பகுதியில், 14 செ.மீ., மழை பெய்துள்ளது.தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. தெற்கு கடலோர ஆந்திர பகுதிகள் மேல், ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நீலகிரி, கோவை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில், இன்று இடி மின்னல் சென்னை வானிலை மையம் புதிய தலைவர்: சிவானந்த தாமோதர பை பொறுப்பேற்பு. Chennai  Weather Center New Head: Sivananda Damodhar Pai Takes Chargeமற்றும்பலத்தகாற்றுடன்மிககனமழைபெய்யக்கூடும். இதற்கான, ‘ஆரஞ்சு அலெர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சென்னை, செங்கல்பட்டு, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல்,மதுரை,திருப்பூர்,வேலுார்,கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ராமநாதபுரம், திருச்சி,நாமக்கல்,கடலுார்,கரூர்,பெரம்பலுார்,அரியலுார்மாவட்டங்கள்,புதுச்சேரியில்இன்றுஇடிமின்னல்மற்றும்பலத்தகாற்றுடன்கனமழைபெய்யவாய்ப்புள்ளது.தமிழகத்தின் பிற மாவட்டங்களில், பெரும்பாலான இடங்களில், இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும்; ஒருசில இடங்களில், இடி மின்னலுடன் மிதமான மழையும், அவ்வப்போது கன மழையும் பெய்யக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close