Others

ஒவ்வொரு குடிமகனும் பத்திரிகையாளராக மாறினால்—-சுப்ரீம் கோர்ட்

Justice In Circles - Supreme Court Observerடில்லியில் அக்டோபர் 10, 11ல் நடந்த போராட்டங்களின் போது பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதாக குற்றம்சாட்டி சுப்ரீம்கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.அப்போது போராட்டங்களைச் செய்தி சேகரிக்கும் சுயாதீன பத்திரிகையாளர்களை டில்லி போலீசார் அங்கீகரிக்கவில்லை; ஐடி கார்டு வைத்திருக்கும் எந்தவொரு பத்திரிகையாளரின் பணிக்கும் போலீசார் இடையூறு செய்யக்கூடாது; ஒரு தேசிய நெறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் தெரிவித்தார். பிறகு நீதிபதிகள் கூறியதாவது:நாம் ஒரு விஷயத்தையும் மனதில் கொள்ள வேண்டும். கருத்துச் சுதந்திரஉரிமையின்கீழ்அனைவரும்தங்களைப்பத்திரிகையாளர்கள்என்றுகூறிக்கொள்ளும்போதுதான்சிக்கல்எழுகிறது.அங்கீகரிக்கப்பட்டஊடகநிறுவனங்களைச்சேர்ந்தஉண்மையான செய்தியாளர்களைஅடையாளம்கண்டு,பாதுகாப்புவழங்குவதுஅரசுக்குகடினமாகிவிடுகிறது.* அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்களை டிஜிட்டல் தளத்தில் பணிபுரிபவர்களிடமிருந்து வேறுபடுத்துவதில் சவால்கள் இருக்கிறது.* சில போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராகக் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன. ஒரு சுதந்திரமான விசாரணை அமைப்பு இதை விசாரிக்க வேண்டுமா என்பதை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.* வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பான நான்கு மனுக்கள் உள்ளன. இது குறித்து பதிலளிக்குமாறு அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Articles

Back to top button
Close
Close