Others

ராகுல் காந்தியுடன் விஜய் இன்று சந்திப்பு….?

ராகுல்காந்தி இன்று சென்னை வருகை; முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்து பேசுகிறார் நாடு முழுவதும் இளைஞர்களின் ஆதரவை கைப்பற்றுவதற்காக காங்கிரஸ் கட்சி சார்பாக மாணவர்களின் குரல் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி இந்திய கல்வி முறையில் நடக்கும் முறைகேடுகள், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, கல்வி கட்டண உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்டவை தொடர்பாக மாணவர்களுடன் பேசி வருகிறார்.ஏற்கனவே கோட்டா, புனே, நாசிக், இந்தூர் ஆகிய நகரங்களில் ராகுல் காந்தி மாணவர்களின் குரல் நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார். அந்த வரிசையில் இன்று சென்னையில் மாணவர்களின் குரல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. தீவுத்திடலில் நடக்கும் நிகழ்ச்சியில் மாணவர்கள் முன் ராகுல் காந்தி பேச உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக இன்று மதியம் 12.30 மணியளவில் ராகுல் காந்தி சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து முதல்வர் விஜய்யை நீலாங்கரையில் உள்ள அவரின் வீட்டில் சந்திக்கிறார். அங்கேயே உணவு சாப்பிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்கு பின் மாலை 5 மணிக்கு தீவுத்திடலில் நடக்கும் மாணவர்களின் குரல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்கிறார்.ராகுல் காந்தி – முதல்வர் விஜய்யின் சந்திப்பு முக்கியத்துவம்Rahul Gandhi Vijay TVK Congress பெற்றுள்ளது. ஏனென்றால் தமிழ்நாட்டில் தவெக – காங்கிரஸ் கூட்டணி அமைந்த பின் இருவரும் 3வது முறையாக சந்திக்கின்றனர். ஏற்கனவே விஜய்யின் பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். இதன்பின் டெல்லி சென்ற விஜய், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.இதன்பின் இன்றைய சந்திப்பு நடக்கவுள்ளது. என்ன தான் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்தாலும், விஜய் பாஜகவை பெரிதாக சீண்டுவதில்லை. SIR விவகாரத்தில் கூட விஜய் வாய் திறக்கவில்லை. ராகுல் காந்தி கைது செய்யப்பட்ட போது கூட பாஜகவின் பெயரை கூட சொல்லாமல்கண்டனம்தெரிவித்திருந்தார்.அதேபோல்இந்தியாகூட்டணிகூட்டத்திலும்பங்கேற்கவில்லை. தமிழ்நாட்டில் தனியாக இந்தியா கூட்டணி கூட்டம்நடத்தப்பட்டது.அந்தகூட்டத்தின் புகைப்படத்தை கூட விஜய் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிரவில்லை. அதேபோல் நாளை பிரதமர் மோடி சென்னை வந்து மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைக்கும் சூழலில், இன்று ராகுல் காந்தி – விஜய் சந்திப்பு நடக்கவிருப்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close